தமிழ் சினிமாவில் காதல் படங்களில் கலக்கிய படங்கள் பற்றிய சிறு தொகுப்பு. டாப் ஸ்டார் முதல் அறிமுக நடிகர்கள் வரை காதல் காட்சிகளில் வெற்றி பெற்றவர்கள்.
காதலுக்கு மரியாதை
காதலுக்கு மரியாதை 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மிகபெரிய வெற்றி பெற்றது.
காதல் கோட்டை
அஜித் தேவயானி நடித்த காதல் கோட்டை வித்தியாசமான காதல் கதை கொண்டது. இதுவும் மிகபெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் காதலை வேறு விதமாக சொன்ன படம்.
மௌன ராகம்
மௌன ராகம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த படத்தில் மூலம் கார்த்திக் பெண்களின் கனவு நாயகனாக வலன் வந்தார்.
சில்லுனு ஒரு காதல்
சில்லுனு ஒரு காதல் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அலைபாயுதே
மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். அந்த காலத்தின் ட்ரென்ட்க்கு ஏத்த மாதிரி படத்தை அமைத்தார் மணிரத்னம்.
சேது
சேது 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக அமைந்தது.
பருத்திவீரன்
பருத்திவீரன் 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம். அமீர் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்தில் உள்ள காதல் கதை அற்புதமான படமாக அமைந்து வெற்றி பெற்றது.
காதலர் தினம்
காதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்
மின்னலே
மின்னலே 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். மாதவன், ரீமா சென் போன்ற பலரின் நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.
விண்ணைத்தாண்டி வருவாயா
இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன், த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மதராசபட்டினம்
இத்திரைப்படத்தின் இயக்குனர் ஏ. எல். விஜய் மதராசபட்டினம் ஆர்யா,ஏமி சாக்சன் நடித்து 2010ல் வெளியான திரைப்படம்.
சொல்லாமலே
1998 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன் கவுசல்யா நடிப்பில் வெளிவந்த படம் சொல்லாமலே. வாய் பேச முடியாமல் நடித்து இறுதியில் காதலிக்காக நாக்கை அறுத்துக் கொண்டு உண்மையாகவே உண்மையாக ஊமையாக மாறிய இந்த படம் இளைஞர்களை ஆட்டிப் படைத்தது.
காதல்
பரத் சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தது என்று சொல்லலாம். பணக்காரப் பெண் ஏழை பைக் மெக்கானிக் பையனை காதலித்தால் சாதிப் பிரச்சனை வரும் என்பதை தத்ரூபமாக காட்டிய படம்.
7G ரெயின்போ காலனி
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அற்புதமான காதல் காவியம். காதலர்களுக்கு உண்மையாக நடக்கும் விஷயங்களை எதார்த்தமாக தங்களது நடிப்பில் ரவி மற்றும் சோனியா அகர்வால் வெளிப்படுத்தி இருப்பார்கள்.
அழகி
நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய பள்ளிக் காலத்தில் சந்திக்கும் ஆளாக நெஞ்சை உருக்கி இருப்பார் பார்த்திபன். இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் இன்று வரை பலரது ஃபேவரைட்.
காதல் கொண்டேன்
செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஓவியமாக வெளியான படம் காதல் கொண்டேன். சைக்கோ த்ரில்லர் கதையாக இருந்தாலும் காதலை அவ்வளவு அழகாக எடுத்துக் கூறியிருப்பார். பல காதலர்களுக்கு இந்த படம் இன்றுவரை பிடித்த ஒன்று.