செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவகார்த்திகேயனுக்கு விழுந்த பெரிய அடி.. மூன்றாவது நாள் வசூலில் தடுமாறிய பிரின்ஸ்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது. அனுதீப் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உக்கிரன் நாட்டு நடிகை மரியா மற்றும் சத்யராஜ் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி இருந்தது.

கார்த்தியின் சர்தார் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சர்தார் படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால் பிரின்ஸ் படத்திற்கு மோசமான விமர்சனங்களை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Also Read :தீபாவளிக்கு நமுத்துப்போன பட்டாசான பிரின்ஸ்.. ஏமாற்றத்தை கொடுத்த முதல் நாள் வசூல்

இதனால் மூன்றாவது நாள் வசூலில் பிரின்ஸ் படம் தடுமாறி உள்ளது. அதாவது முதல் நாள் பிரின்ஸ் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருந்தது. அதாவது 8 கோடி முதல் நாள் வசூல் செய்தது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது நாள் வசூலில் 6 கோடி வசூல் செய்தது.

தற்போது மூன்றாவது நாள் வசூல் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது வெறும் 5 கோடி மட்டுமே வசூல் செய்தது. தொடர்ந்து பிரின்ஸ் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் வசூல் சரிவை சந்தித்து உள்ளது. மேலும் பிரின்ஸ் படம் மொத்தமாக மூன்று நாட்களில் 19 கோடி கலெக்ஷன் செய்துள்ளது.

Also Read :மீண்டும் அதே நிலமைக்கு வந்த சிவகார்த்திகேயன்.. படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்

மேலும் மொத்தமாக பிரின்ஸ் படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி ரைட்ஸ் ஆகியவை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸ் செய்துள்ளது. மேலும் மூன்று நாள் முடிவில் 19 கோடி கலெக்ஷன் செய்துள்ளதால் பிரின்ஸ் படத்திற்கு நஷ்டம் ஏற்படவில்லை.

இனி வரும் கலெக்ஷன் லாபம் என்றாலும் பெரிய அளவில் படத்திற்கு லாபம் கிடைப்பது கேள்வி குறிதான். மேலும் சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு படம் அவருக்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. பிரின்ஸ் படத்தின் விமர்சனத்தால் தற்போது தெலுங்கு படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் பயத்தில் உள்ளனர்.

Also Read :ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்.. அடிமாட்டு விலைக்கு பிசினஸ் பேசும் ஓடிடி நிறுவனம்

Trending News