வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லோகேஷ், ரஜினி படத்திற்கு எதிராக தயாராகும் தரமான படம்.. சன் பிக்சர்ஸ் செய்த துரோகத்தால் ஏற்பட்ட விளைவு

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இப்போது தளபதி விஜய்யின் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு எதிராக தரமான ஒரு படம் போட்டிக்காக ரெடியாகிறது.

இதெல்லாம் சன் பிக்சர்ஸ் செய்த துரோகத்தால் தான் ஏற்பட்டுள்ளது. சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்ட மாதிரி லோகேஷுக்கு எதிராக அட்லியை திருப்பி விட்டு இருக்கின்றனர். ஜவான் படத்திற்கு பிறகு அட்லி- விஜய் இருவரும் இணையப் போகிறார்கள்.

Also Read: லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காபி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முன்னரே பேசப்பட்டது தான். ஆனால் தற்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சன் பிக்சர்ஸ் அப்படியே கழட்டி விட்டு ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத அட்லி கடுப்பில் இருக்கிறாராம்.

விஜய்யும் அட்லியை கண்டுகொள்ளவில்லையாம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சன் பிக்சர்ஸ்- விஜய் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையில் அட்லி தலை தான் உருளுகிறது. இவ்வளவு பெரிய ஜவான் என்ற வெற்றி படத்தை கொடுத்தும் இந்த நிலைமையா! என அதிர்ச்சியில் இருக்கிறார்.

Also Read: விஜய்யை திசை திருப்பி குளிர் காய நினைக்கும் பக்கவாத்தியம்.. கண் மூடித்தனமாக நம்பி காரியத்தில் இறங்கும் தளபதி

இதனால் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து படத்தை எடுத்து விட்டு அடுத்தபடியாக கமல் மற்றும் ஷாருக்கான் இணைத்து படத்தை தொடங்குகிறார் அட்லி. இது தமிழ் படமாக தான் இருக்கப் போகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினி- லோகேஷ் படத்திற்கு எதிராக திரையிட முடிவு செய்துள்ளாராம் அட்லி.

நம்ப வச்சு ஏமாற்றிய சன் பிக்சர்ஸ் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று அட்லி இப்போது வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல தலைவர் 171 படத்திற்கு இணையாக தரமான படத்தை தயார் செய்து திரையில் மோதிக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.

Also Read: லியோ படம் நினைச்ச மாதிரி ஓடணும்னா, அவர வந்து பேச சொல்லுங்க! மறைமுகமாக ஸ்கெட்ச் போடும் உதயநிதி

Trending News