செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மம்முட்டியை மிஞ்சிய மோகன்லால்.. தலைசுற்ற வைத்த ஒட்டுமொத்த சொத்து மதிப்பு

மோலிவுட்டின் ராக் ஸ்டார் ஆக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்களுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களும் உள்ளனர். அதிலும் கேரளாவில் கிங்காக வாழ்ந்து வரும் மோகன்லால் தன்னுடைய 63 வயதிலும் இளம் நடிகர்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்று அவருடைய 63 வது பிறந்த நாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவரை பற்றிய பேச்சு தான். அதிலும் மம்முட்டியை மிஞ்சும் அளவுக்கு இவர் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அதைப்பற்றி தெரிந்த பலரும் தலை சுற்றி போய் கிடக்கின்றனர். மோகன்லால் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பாரோஸ் என்ற படத்தை பிரம்மாண்டமாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: லோகேஷ் ரீமேக் செய்ய ஆசைப்படும் 5 படங்கள்.. 3 கமல் படங்களை குறி வைத்து போடும் திட்டம்

தன்னுடைய 20 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய மோகன் லால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் தமிழில் உலக நாயகனுடன் உன்னைப்போல் ஒருவன், தளபதியுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் நடித்த படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்து கோலிவுட்டிலும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மோகன் லாலின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. இவர் இன்றும் சம்பளமாக ஒரு படத்திற்கு 15 கோடி மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார். இவரைப் போலவே இவரது மகனும் மகன் பிரணவ்-வும் தற்போது சினிமாவிற்கு கதாநாயகனாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் இவர் சினிமாவில் இத்தனை வருடங்களாக பல கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.

Also Read: செய்திகள்வெளிநாடுகளில் மாஸ் காட்டிய 3 மலையாள திரைப்படங்கள்.. மனிதத்தை போற்றும் ‘2018’

திருவனந்தபுரத்தில் இவருக்கு ஒரு பெரிய வீடுள்ளது. இதைத் தவிர சுமார் 50 ஏக்கர் நிலமும் கொச்சியில் வாங்கி போட்டு இருக்கிறார். இவருக்கு 30 கோடி மதிப்புள்ள கார்கள் உள்ளது. கிட்டத்தட்ட தன்னுடைய 43 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் சொத்துக்களாகத்தான் வாங்கி வைத்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி, விளம்பரம் என இவருக்கு ஆண்டிற்கு 50 கோடி வரை சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.

மொத்தமாக மோகன்லாலுக்கு ஒட்டுமொத்தமாக 450 கோடி சொத்து இருக்கிறது. ஆனால் மம்முட்டியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு வெறும் 350 கோடி மட்டுமே. இவரிடம் 15 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மலையாள ஹீரோக்களில் அதிக சொத்துடன் வாழும் ஹீரோ இவர்தான். இவருடைய நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஜெயிலர் மற்றும் எம்புடரான் போன்ற படங்களும் வெளியாகி அவருடைய வெற்றிக்கு மேலும் பெருமை சேர்க்க போகிறது. மோகன்லாலின் பிறந்தநாள் இன்று திரைபிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.

Also Read: பண்ணுனதெல்லாம் போதும், ஒரேடியாக ஆப் செய்த ரஜினி.. விஜய்யிட்ட செஞ்ச மாதிரி நெல்சனின் பருப்பு வேகல!

Trending News