திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்பு மீது காண்டான அஜித், தனுஷை வைத்து போடும் பக்கா பிளான்.. விஜய்யின் வாரிசு படத்தால் வந்த வம்பு

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இவர் ஏற்கனவே ஹெச். வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை, வலிமை என தொடர்ந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய 62வது படத்தில் புதிய கூட்டணியாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணையவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு தொடங்கவிருக்கிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். விக்னேஷ் சிவன் எப்போதுமே ரொம்பவும் எதார்த்தமான, வித்தியாசமான கதைக்களத்தில் படம் எடுப்பவர். இப்போது அஜித்தின் இந்த படத்தில் கௌதம் மேனன் அல்லது விஜய் சேதுபதியை அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க இவர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.

Also Read: ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பதட்டத்தில் விஜய் செய்த காரியம்.. துணிவை ஜெயிச்சே ஆகனுமாம்

ஆனால் விக்னேஷ் சிவன் வேறொரு புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் படத்தில் யார் வில்லன் என்பதே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. விக்ரம் படத்தில் கூட சூர்யா வில்லனாக நடித்திருந்தார். அந்த வரிசையில் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தில் நடிகர் தனுஷை நெகட்டிவ் ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அஜித் படத்தில் தனுஷை வில்லனாக நடிக்க வைப்பது என்பது யதார்த்தமாக நடக்கும் ஒன்று என ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர் இதற்கு வேறொரு காரணத்தையும் கூறி வருகின்றனர். அதாவது தீவிர அஜித் ரசிகரான சிம்புவை வாரிசு படத்தில் நடிகர் விஜய் பாட்டு பாட வைத்து, ஆட வைத்ததன் விளைவு தான் இப்போது அஜித் படத்தில் தனுஷ் நடிக்க காரணம் என்கிறார்கள்.

Also Read: விஜய்யை பார்த்து பயந்த போனி கபூர்.. ஒரே வார்த்தையால் தைரியம் கொடுத்த அஜித்

பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது என்றாலும், தனுஷ் இந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என்றும், விரைவில் படக்குழு அப்டேட்டுகளை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விக்னேஷ் சிவனுக்காக தனுஷ் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அவர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் வெற்றி இயக்குனர்.

AK62 படத்தை பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும், காமெடி கேரக்டரில் ஜிபி முத்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பொங்கலுக்கு பிறகு எதிர்பார்க்கலாம்.

Also Read: துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய மஞ்சு வாரியர்.. செல்லப் பெயர் வைத்த அஜித்

Trending News