செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இப்படியும் நடிக்க முடியுமா என வியக்க வைத்த பகத் பாசிலின் 4 படங்கள்.. விக்ரம் அமரை மீண்டும் புக் செய்த கமல்

நடிகர் பகத் பாசில், இந்திய சினிமா உலகிற்கே கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை இவர் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். இவரை நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம். மலையாள நடிகரான இவர் கோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். ரசிகர்களின் வரவேற்பால் அடுத்தடுத்து தமிழ்ப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

வேலைக்காரன்: பகத் பாசில் முதன்முதலாக தமிழில் நடித்த திரைப்படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சினேகா, நயன்தாரா ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். பஞ்ச் டயலாக், அதிரடி சண்டை காட்சிகள் இல்லாமல் கண்களாலேயே மிரட்டியிருந்தார்.

Also Read: தொட்ட படமெல்லாம் சூப்பர் ஹிட் அடிக்க காரணம் இதுதான்.. வெற்றி ரகசியத்தை கூறிய பகத் பாசில்

சூப்பர் டீலக்ஸ்: பகத் பாசில் என்ற ஒரு மகாநடிகனை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்டிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தன் மனைவியுடன் சேர்ந்து ஒரு கொலையை மறைக்கும் காட்சியில் நுணுக்கமாக நடித்திருக்கிறார்.

புஷ்பா: பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்யப்பட்ட படம் இது. இந்த படம் மூலமாக பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமானார். நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக அதிரடியாக மிரட்டியிருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது. இப்போது இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

Also Read: நேரில் வந்து வச்சிக்கிறேன்.. விடாப்பிடியாய் பகத் பாசில் லோகேஷ்க்கு அனுப்பிய பரிசு

விக்ரம்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தில் பகத் பாசில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் மொத்த கதையும் இவரை சுற்றியே அமைந்திருக்கும்.

மாமன்னன்: ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாஃசில், வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தேவர் மகன் 2: கமல் திரைக்கதை எழுதி, நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த தேவர் மகன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இப்போது ரெடியாகி கொண்டிருக்கிறது. விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து கமல் இந்த படத்தில் பகத்பாசிலை நடிக்க வைக்கிறார்.

Also Read: மதத்தை சுக்குநூறாக நொறுக்கிய பகத் பாசில்.. விக்ரமுக்கு சவால் விடும் நிலை மறந்தவன்

Trending News