திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

Actor Kamal Haasan Upcoming Projects:உலகநாயகன் கமலஹாசனுக்கு கிட்டத்தட்ட கடந்த 10 முதல் 15 வருடங்கள் ஆகவே பொருளாதார ரீதியாக எந்த படங்களுமே வெற்றி அடையவில்லை என்பதுதான் உண்மை.  அவருடைய சமீபத்திய மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் திரைப்படம் தான். இந்த திரைப்படம் கொடுத்த நம்பிக்கைதான் உலகநாயகன் இன்று சினிமாவில் மீண்டும் களம் இறங்கி முன்பை விட படு வேகமாக வேலை செய்து வருகிறார். தற்போது அவருடைய கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன.

இந்தியன் 2: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது கமல் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமும் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இந்தியன் 2 தற்போது உருவாகி வருகிறது.

Also Read:பிரபாஸ் உடன் 600 கோடி பட்ஜெட்டில் இணையும் கமல்.. இவ்வளவு கம்மி சம்பளமா என ஷாக் ஆன திரையுலகம்

ப்ராஜெக்ட் கே: இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் கமல் வில்லன் ரோலில் நடிக்க இருப்பதாக முதலில் வதந்திகள் வெளியாகின. தற்போதைய இந்த செய்தியை அந்த படக்கழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்த படத்திற்கு கமலுக்கு சம்பளம் மற்றும் 150 கோடி பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

KH233: நடிகர் அஜீத் குமாரை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் தன்னுடைய 233 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் இந்த படத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read:அரசியல் ஆதாயத்திற்காக மௌன சாமியாரான கமல்.. சாதி சர்ச்சையால் கொந்தளித்த விஜய் பட இயக்குனர்

KH234: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் நடிக்கவிருக்கிறார். இது அவருடைய 234 வது படமாகும். மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கவனம் செலுத்துவதோடு, தயாரிப்பிலும் அதிகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR 48 என்னும் பெயரிடப்படாத படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்கிறது. மேலும் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தையும் கமல்தான் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:ஆதிபுருஷால் ஆண்டவரிடம் தஞ்சமடைந்த பிரபாஸ்.. மாஸ் கூட்டணியில் உருவாகும் ப்ராஜெக்ட் கே

Trending News