வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலுக்கு படுதோல்வியை கொடுத்த 5 படங்கள்.. கதை நல்லா இல்லைன்னா அந்த ஆண்டவனா இருந்தாலும் சறுக்கல் தான்

எப்போதுமே உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எப்படி இருந்தாலும் அந்த படத்தை காப்பாற்ற அவர்களுடைய ரசிகர்கள் இருப்பார்கள். இதனாலேயே சில தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் இந்த நட்சத்திரங்களின் படங்களுக்கு செலவழிப்பார்கள். சில நேரங்களில் இந்த ஸ்டார்ஸும் ரசிகர்களின் மீதான நம்பிக்கையில் எப்படிப்பட்ட கதையானாலும் நடித்துவிடுவார்கள். இதுபோன்ற காலங்களில் சில நேரம் ரசிகர்களே தங்கள் ஹீரோக்களுக்கு பாடம் புகட்டிய சம்பவங்களும் உண்டு.

1.மன்மதன் அம்பு: கமல் கதை எழுதி, கே எஸ் ரவிக்குமார் இயக்கி 2010 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் மன்மதன் அம்பு. இந்த படத்தில் மாதவன், திரிஷா, சங்கீதா, ஓவியா, ரமேஷ் அரவிந்த், மஞ்சு பிள்ளை, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யா ஒரு பாடலில் மட்டும் நடித்திருப்பார். இந்த படம் தோல்வியை சந்தித்தது.

Also Read: நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த 5 துணை கதாபாத்திரங்கள்.. கமலே வியந்து பார்த்த MS பாஸ்கர்

2. மும்பை எக்ஸ்பிரஸ்: மும்பை எக்ஸ்பிரஸ் பிளாக் காமெடியை மைய்யமாக கொண்டு எடுத்த திரைப்படம். கமல் தயாரித்து நடித்த இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கமல், மனிஷா கொய்ராலாவுடன் சேர்ந்து நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படத்தோடு ரிலீஸ் ஆகி படுதோல்வியடைந்தது.

3.தூங்காவனம்: ஸ்லீப்லெஸ் நைட் என்னும் பிரெஞ்சு படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட திரைப்படம் தூங்காவனம். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் நடித்த இந்த திரைப்படம் தீபாவளி ரிலீசாக வெளிவந்து பிளாப் ஆனது. தளபதி விஜயின் துப்பாக்கி படத்தோடு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

Also Read: கமல்ஹாசனுக்காக என் உயிரையே கொடுப்பேன்.. மனம் உருகி பேசிய ரஜினி பட வில்லன்

4. வெற்றிவிழா: வெற்றிவிழா 1989 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். இந்த படத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ ஆகியோர் நடித்திருந்தார். சிவாஜி புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும் படம் அட்டர் பிளாப் ஆனது.

5.இந்திரன்-சந்திரன்: 1989 ஆம் ஆண்டு கமலஹாசன் தெலுங்கில் நடித்த இந்திருடு சந்திருடு படத்தின் தமிழ் மொழியாக்கம் தான் இந்திரன்-சந்திரன். இந்த படம் 1990 ஆம் ஆண்டு தமிழில் ரிலீஸ் செய்யப்பட்டது. கமல்ஹாசன், விஜயசாந்தி மற்றும் சரண்ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் அந்த அளவுக்கு பேசப்படவில்லை. இந்த படத்தின் தெலுங்கு வெர்சனில் கமலுக்கு SPB டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

Also Read: கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட கமல் அண்ட் கோ.. கடும் கோபத்தில் ஆப்பு வைக்க ரெடியாகிய தயாரிப்பாளர்

Trending News