வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வடிவேலு மாதிரி நடிக்க ஆசைப்பட்ட மயில்சாமி.. உதவாமல் போன திரை பிரபலங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகர் மயில்சாமி கடந்த ஞாயிற்று கிழமை அன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருடைய மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களும் நேரில் சென்று, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மயில்சாமி மறைவிற்குப் பிறகு அவருடைய நிறைய நல்ல பண்புகளைப் பற்றியும், உதவும் உள்ளம் பற்றியும் திரை பிரபலங்களும், பொதுமக்களும் மீடியாவில் பேசி வருகின்றனர். மேலும் நடிகர் மயில்சாமி உயிருடன் இருக்கும் போது அவரை பற்றி தெரியாத விஷயங்கள் நிறைய தற்போது வெளிவர தொடங்கி இருக்கின்றன.

Also Read: இரண்டே மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 8 திரை பிரபலங்களின் மறைவு.. பேரதிர்ச்சியை கொடுத்த மயில்சாமி

அதில் ஒன்றுதான் சினிமா துறையில் மயில்சாமிக்கு இருந்த கடைசி மற்றும் நிறைவேறாத ஆசை. நடிகர் மயில்சாமியை பொறுத்த வரைக்கும் காமெடி கேரக்டராக இருக்கட்டும், குணச்சித்திர கதாபாத்திரமாக இருக்கட்டும் எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் எதார்த்தமாக நடிக்கக்கூடிய ஒரு மகா நடிகன் என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட அந்த நடிகனுக்கு வைகைப்புயல் வடிவேலு மாதிரி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் சினிமாவை சேர்ந்த நிறைய பேர் மயில்சாமி ஹீரோவாக நடிப்பதை மறைமுகமாக தடுத்திருக்கின்றனர். இன்று அவரை நல்லவர், வல்லவர் என்று புகழும் ஒருவர் கூட மயில்சாமியை ஹீரோவாக்க முன் வரவில்லை.

Also Read: தான தர்மம் போக மயில்சாமி சேர்த்து வைத்த சொத்துக்களின் மொத்த மதிப்பு.. குடும்பத்தையும் நல்லா பாத்துகிட்ட மனுஷன்

இதனால் மயில்சாமி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று இருந்த ஆசையையே மறந்துவிட்டாராம். சினிமாவில் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளை கூட பயன்படுத்திக் கொண்ட மயில்சாமியின் பாதை அப்படியே மாறிவிட்டது. ஆனால் மயில்சாமிக்கு இது ஒரு நிறைவேறாத ஆசை என்று அவருடைய நண்பர்கள் இப்போது சொல்லி வருகின்றனர்.

மயில்சாமி ரொம்பவும் எதார்த்தமாக நடிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர். திருவிளையாடல் ஆரம்பம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் குடிகாரன் போன்று அப்படியே அச்சு அசலாக நடித்திருப்பார். மேலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கக்கூடிய திறமையுள்ள நடிகர்.

Also Read: யாருக்கும் தெரியாத மயில்சாமியின் மறுபக்கம்.. மனதை கனக்க வைக்கும் 8 அதிசய குணங்கள்

Trending News