திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆண்டவருக்கே அல்வா கொடுக்க நினைத்த சிம்பு.. விட்டு பிடிக்கும் உலக நாயகன்

STR 48: உலகநாயகன் கமலஹாசன் மீண்டும் தன்னுடைய தயாரிப்பு பணிகளில் பிஸியாகி இருக்கிறார். பல டாப் ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்கள் கமலின் தயாரிப்பில் வரிசை கட்டிக்கொண்டு நடிக்க காத்திருக்கும் நிலையில், அவர் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவின் படங்களை தயாரிப்பதற்கு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

சிம்பு நடிக்க இருக்கும் படத்தை பற்றி மட்டும் எந்த தகவலும் வெளிவராமல் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. சிம்பு அடுத்தடுத்து படங்கள் அடித்து விட்ட இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது. பத்து தலை படத்தின் ரிலீஸ் சமயத்தில் வெளிநாடு போன சிம்பு இன்னும் இந்தியா திரும்ப வில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Also Read:ஒரு நாள் சம்பளத்தை தாரைவார்க்கும் மாயா.. விஜய் டிவியின் அரசியலை தோலுரித்த பாய்சன்

இதற்கு இடையில் சிம்பு சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வேறு சர்ச்சைகள் கிளம்பியது. எஸ் டி ஆர் 48 ஆரம்பிக்காமல் இருப்பதற்கு இது கூட காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. உண்மையில் அந்த படத்தின் வேலைகள் இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே சிம்பு தான்.

வெளிநாட்டுக்கு பறந்த சிம்பு

எஸ் டி ஆர் 48 படம் வரலாற்று படமாக உருவாக இருக்கிறது. இதற்காக சிம்பு பயங்கரமாக மெனக்கெட இருக்கிறாராம். வரலாற்று படத்திற்கு ஏற்ற மாதிரி தன்னுடைய உடல் அமைப்பை மாற்றுவதற்காக தான் லண்டனுக்கு சென்றிருக்கிறாராம். படத்திற்கு ஏற்றவாறு மொத்தமாக தன்னுடைய உடலை மாற்றிக் கொண்டு வருவதாக கமலுக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறாராம்.

சிம்பு நீளமான தலைமுடியுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சிம்பு சொன்னபடி தன்னை மாற்றி விட்டு வரட்டும் என கமலஹாசன் பொறுமையாக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் இத்தனை வருடங்கள் எத்தனையோ விஷயங்களை, பல தரப்பட்ட மனிதர்களை கடந்து வந்திருப்பார் கமல். இதனால் தான் சிம்புவை விட்டு பிடிப்போம் என காத்திருக்கிறாராம்.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட அவரும் மீண்டும் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறார். சமீபத்திய தகவலின் படி சிம்பு புத்தாண்டை லண்டனில் கொண்டாடிவிட்டு தான் இந்தியா திரும்புகிறார். வரும் பிப்ரவரி மாதம் படத்தின் போட்டோ சூட் எடுக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Also Read:அதெல்லாம் பேசக்கூடாது, நீ ஏன் அதை சொல்ற.? ஆண்டவர் தலையை உருட்டும் பூர்ணிமா

Trending News