வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தனுஷுக்கு போட்டியாக சிம்பு கைவசம் இருக்கும் 5 பார்ட் 2 படங்கள்.. மாஸாக ரெடி ஆகும் STR 50

Simbu – Dhanush: நடிகர் தனுஷுக்கு வடசென்னை 2, புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என அவருடைய முக்கியமான படங்கள் காத்திருக்கின்றன. தனுஷுக்கு போட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் சிம்பு தற்போது அடுத்தடுத்து தன்னுடைய ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரெடியாகி கொண்டிருக்கிறார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

5 பார்ட் 2 படங்கள்

தொட்டி ஜெயா 2: நடிகர் சிம்புவின் சினிமா கேரியரில் நல்ல வெற்றியைப் பெற்ற படம் தான் தொட்டி ஜெயா. அதுவரை காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த சிம்பு இந்த படத்தில் தான் முதன்முறையாக ஆக்சன் கதையை முயற்சி செய்திருந்தார். அந்த முதல் முயற்சியே அவருக்கு வெற்றியாகவும் அமைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விண்ணை தாண்டி வருவாயா: 90ஸ் கிட்ஸ்களின் மனதிற்கு நெருக்கமான காதல் படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படமும் ஒன்று. இந்த படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருக்கும். படத்தின் கதை மற்றும் இசைக்காக மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. கொரோனா சமயத்திலேயே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் படத்தில் உருவாவது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.

Also Read:வில்லனாக நடிக்கும் சிம்பு.. வம்பு பண்ணாம இருந்தா சரிதான்

வெந்து தணிந்தது காடு 2: மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு சினிமாவிற்கு கம் பேக் கொடுத்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்காக சிம்பு உடல் எடையை ஏற்றி, இறக்கி ரொம்பவே கடின உழைப்பை போட்டிருந்தார். அந்த உழைப்பிற்கு கைமேல் பலனும் கிடைத்திருந்தது. வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவின் போது அதன் இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகப்பட்டுவிட்டது.

STR 48 1&2: உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் தான் எஸ்டிஆர் 48. இந்த படம் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்காக சிம்பு நீளமான முடியையும் வளர்த்து வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது.

மன்மதன் 2: நடிகர் சிம்பு இயக்கி நடித்து பெரிய அளவில் வெற்றியைப் பெற்ற பதம் தான் மன்மதன். இந்த படத்தை சிம்பு இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்த படம் அவரின் ஐம்பதாவது படமாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்குவது தான்.

Also Read:சிம்புவை அடுத்த லெவலுக்கு கொண்டு போன 5 படங்கள்.. சீனா தானாவ அடித்து துவட்டிய தொட்டி ஜெயா

Trending News