கொல பசியில் பழைய பாணிக்கு திரும்பிய சிம்பு.. சர்ப்ரைஸ் ஆக கொடுத்த STR48 அப்டேட்

நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இயக்குனரான கிருஷ்ணாவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்த படம் மப்டி என்னும் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிலம்பரசன் மணல் கடத்தும் தாதாவாக வருகிறார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா பவானிசங்கர் நடிக்கின்றனர். பத்து தல படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சிம்புவின் 48 ஆவது படத்தின் அப்டேட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏற்கனவே அவர் தன்னுடைய 48 ஆவது படம் கொரோனா குமார் என்று அறிவித்திருந்த நிலையில், அந்த படம் தற்போது ‘லவ் டுடே’ பட இயக்குனர் மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதனிடம் கை மாறியிருக்கிறது. இதனால் சிம்புவின் அடுத்த படத்தை பற்றி பல வியூகங்கள் எழுந்து வந்தன.

தற்போது சிம்பு, சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய ஹிண்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் சினிமா மீது நான் தீராத பசியில் இருப்பதாகவும், அந்த பசியை தணித்து கொள்ள தானே ஒரு படத்தை இயக்கி, நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஒரு வேளை சிம்பு, தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி, நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவுக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல. ஒரு படத்தில் இசை, பாடல், இயக்கம் என அத்தனையும் இதற்கு முன்பாக பார்த்திருக்கிறார். இவருடைய இயக்கத்தில் மன்மதன், வல்லவன் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. இப்போது  சிம்பு படம் இயக்கினால் அவருடைய ரசிகர்களுக்கு மீண்டும் அவருடைய பழைய நடிப்பை பார்த்த மாதிரி இருக்கும்.

இதற்கிடையில் சிம்பு, அவருடைய முந்தைய ஹிட் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தயாரிப்பாளர், ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸுடன் இணையவிருக்கிறார் என்று கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது சிம்புவின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பது உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.

‘பிளட் அண்ட் பேட்டல்’ என்று தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட இருப்பதாக நேற்று டிவிட்டரில் ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பகிர்ந்திருந்தது. இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கிறார், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →