ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கோவாவில் காதலனை கரம் பிடித்த ரகுல் பிரீத் சிங்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

Actress Rakul Preet Singh Wedding Photos: முதலில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ் சினிமாவிற்கு தடையற தாக்க படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன்பின் கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் துரு துருன்னு நடித்து இளசுகளின் ஃபேவரிட் ஹீரோயின் ஆகவே மாறினார். அதோடு இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருந்தார்.

கோவாவில் நடந்த ரகுல் பிரீத் சிங்-ன் திருமண புகைப்படம்

rakul-preet-singh-wedding-photo-2
rakul-preet-singh-wedding-photo-1-cinemapettai

மேலும் உலக நாயகன்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 போன்ற படங்களிலும் இவர்தான் கதாநாயகி. இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது காதலனை கோவாவில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் ரகுல் ப்ரீத் சிங்கும் கடந்த இரண்டு வருடங்களாகவே காதலித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோவாவில் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சீக்கிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.

நடிகை ரகுல் பிரீத் சிங்-ன் திருமண புகைப்படம்

rakul-preet-singh-wedding-photo-1-cinemapettai
rakul-preet-singh-wedding-photo-2-cinemapettai

Also Read: கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதைதான்.. வாய்ப்பு இல்லாமல் உடையை குறைத்து புகைப்படம் வெளியிடும் 5 நடிகைகள்

முன்னதாக இவர்களது திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று கோவாவில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். மோடியும் சங்கீத் நிகழ்ச்சியின் போது மணமக்களுக்கு போன் செய்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காதலனை கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்

rakul-preet-singh-wedding-photo-3
rakul-preet-singh-wedding-photo-3-cinemapettai

இவர்களது திருமண புகைப்படம் இப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இந்த புகைப்படங்களிலேயே இவர்களது காதல் ததும்புகிறது. இந்த போட்டோஸில் ரகுல் ப்ரீத் சிங் ஒரு அழகிய ரோஜா பொக்கே போலவே செம க்யூட் ஆக இருக்கிறார். தற்போது ரசிகர்களும் திரை பிரபலங்களும் சோசியல் மீடியாவின் மூலம் தங்கள் வாழ்த்துக்களை இந்த காதல் ஜோடிக்கு தெரிவிக்கின்றனர்.

கோலாகலமாக நடந்த ரகுல் பிரீத் சிங்- ஜாக்கி பக்னானி திருமணம்

rakul-preet-singh-wedding-photo-4
rakul-preet-singh-wedding-photo-4-cinemapettai

Also Read: ஓசில கூப்பிடுறாங்கன்னு குடிக்க போன 10 பிரபலங்கள்.. மாலத்தீவை குழி தோண்டி புதைக்க இதுதான் முக்கிய காரணம்

Trending News