புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரீ ரிலீஸ்ல் ரெண்டு வருடமா ஓடும் படம்.. மொத்த காதலையும் வெளிக்காட்டி கிரங்கடித்த திரிஷா

Actress Trisha tamil film is running for two years in re-release: தமிழ் சினிமாவில்  அரைத்த மாவையே அரைத்து பல புளித்துப் போன கதைகளை டிங்கரிங் செய்து புது படமாக எடுத்து மக்களை பார்க்க வைக்க முற்பட்டு தோல்வியை தழுவுகின்றனர். இந்த வகையில் வாரம் பல படங்கள் வெளிவந்தாலும் அதனைத் தாண்டி ரீ ரிலீஸ் செய்யப்படும் சில தனித்துவமான படங்களுக்கும் மவுசு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இங்கே ஒரு படம் ரீ ரிலீசில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

ஏன்… என் இதயம்…உடைத்தாய் நொறுங்கவே…என் மறு இதயம் தருவேன்…நீ உடைக்கவே… என்று காதலன் காதலினால்  உருகுவதையும், பிரிவின் வழியால் துடிக்கும் நாயகனின் தாபத்தையும் ஒரு சேர உணர்த்திய திரைப்படம் தான் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா. 

இன்றுவரை காதலை மையமாகக் கொண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளி வந்தாலும் அதன் அத்தனை சாதனைகளையும் உடைத்து எரிந்து முழுக்க முழுக்க காதலர்களை உணர்ச்சி பொங்க ரசிக்க வைத்த திரைப்படம்  2010ல் கௌதமேனன் இயக்கத்தில்  சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா. இத்திரைப்படம் சிம்பு மற்றும் திரிஷாவின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. 

Also read: கொஞ்சம் அசந்ததனால் சிம்புக்கு வந்த நிலை.. GVM படத்துக்கு பின் STR எடுத்த தடாலடி முடிவு

காதலுக்கு தடையாக உள்ள மதம், அந்தஸ்து,வயது இவை அனைத்தையும் தாண்டி ஃபுல் ஆப் ரொமான்ஸில் சிம்பு மற்றும் திரிஷாவிற்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி நிரம்பி வழிந்த இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசை பக்கபலமாக அமைந்தது. 

இதற்கு முன் திரையிடப்பட்ட ரீரிலிஸ் செய்யப்பட்ட சாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் தான் அதிக நாள் ஓடியதாக சாதனை புரிந்திருந்தது. இதனை மிஞ்சும் அளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சென்னை அண்ணா நகரில் வி ஆர் மாலில் 760 நாட்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பவும் பகல் 12 மணி ஷோதான். 

திரையரங்கில் இன்றைய இளைஞர்கள் இப்படத்தின் பாடல் காட்சிகளின் போது கூட சேர்ந்து பாடி கச்சேரியே செய்து விடுகின்றனராம். முதல் வெளியிட்டிலேயே 50 கோடியை தாண்டி சாதனை செய்தது. காதலுக்கும் அழிவில்லை! காதல் காவியத்திற்கும் அழிவில்லை! என்று இத்திரைப்படம் இன்று ரீ ரிலீசில் கிட்டத்தட்ட ரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்து ரெக்கார்டு பிரேக் செய்துள்ளது.  

Also read: திரிஷாவை போல் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை.. சேலம் பிரபலத்துக்கு எம்ஜிஆர் கொடுத்த விசேஷ விருந்து

Trending News