திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனோட ஜோடி போட அதிதி சங்கருக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது.. சீக்ரெட்டை போட்டுடைத்த பயில்வான்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மதுர வீரன்’ என்ற பாடலை பாடி பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

ஆனால் இந்த பாடலை முதலில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி தான் பாடியதாகவும், ஆனால் யுவன் சங்கர் ராஜா யாரோ ஒருவரின் வற்புறுத்தலின் காரணமாக ராஜலட்சுமி பாடலை நீக்கிவிட்டு, அதிதி சங்கரை பாட வைத்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read: சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்.. கமல் படத்திற்கு பின் வெற்றி இயக்குனருடன் கூட்டணி

இந்த பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்ற உண்மையை பயில்வான் ரங்கநாதன் போட்டுடைத்திருக்கிறார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் அதன்பின் சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்க கூடிய பயில்வான் ரங்கநாதன் சினிமா குறித்தும் திரையுலக நடிகர் நடிகைகளை குறித்த பல அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல சில சீக்ரெட் விஷயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிதி சங்கருக்கு மாவீரன் படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதாவது அதிதி சங்கரும் சிவகார்த்திகேயனும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான் மாவீரன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று தெரிவித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Also Read: அக்கட தேசப்படத்திற்கு ஆர்வம் காட்டி வரும் 5 நடிகர்கள்.. மொக்கை வாங்கிய பிரின்ஸ்

அது மட்டுமல்ல அதிதி சங்கர் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிக்க மாட்டேன் என சொன்னதையும் வைத்து பார்க்கும் போது, சொன்னது உண்மையாக இருக்குமோ என்றும் சிலர் நம்புகின்றனர். இப்போது அதிதி சங்கரை முன்னணி நடிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். ஏனென்றால் ஷங்கர் வீடும் சிவகுமாரின் வீடும் அருகருகே இருப்பதால் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் அதிதி சங்கரும் நல்ல நண்பர்கள்.

சமீபத்தில் அதிதி சங்கர் அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த ஹீரோ யார் என கேள்வி கேட்டதும் சட்டென்று சூர்யா என சொல்லிவிட்டார். இதனால் கடுப்பான முன்னணி நடிகர்கள் அதிரடி சங்கருடன் ஜோடியாக நடிக்க மறுக்கின்றனர் பொதுவாக நடிகைகளின் வாயை பிடுங்க வேண்டும் என்பதற்காகவே பேட்டியில் பல சர்ச்சைக்குரிய கேள்விகளை தொகுப்பாளர்கள் கேட்பார்கள்.

Also Read: விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப்.. புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்

ஆனால் மற்ற நடிகைகள், ‘எல்லா நடிகர்களையும் பிடிக்கும்’ என்று மழுப்பலான பதிலை சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். ஆனால் அதிதி சங்கர் சூர்யாவை பிடிக்கும் என சொன்னதால் மற்ற நடிகர்கள் இவருடன் இணைந்து நடிக்க தயங்குகின்றனர். மேலும் மாவீரன் படத்தில் அவரும் சிவகார்த்திகேயனும் ஒரே ஜாதியாக இருப்பதால் தான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Trending News