வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு.. எஸ்கே 21 ஷூட்டிங்கில் இணைந்த கதாநாயகி

SK 21 Movie: டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடி வசூலை குவித்த சிவகார்த்திகேயன், சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தில் உலகம் முழுவதும் 80 கோடி வசூலை வாரி குவித்து இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 வது படமான எஸ்கே 21 படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமலஹாசனின் தயாரிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எஸ்கே 21 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், தற்போது காஷ்மீர் செட்டியூலை முடிந்து விட்டனர்.

Also read: மனைவிக்கு வித்தியாசமாக திருமண வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கியூட் போஸ்ட்

இதனால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும்சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் நடைபெறப்போகிறது. இந்த படம் போர் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்பதால் இதில் மிகவும் பிரமாண்டமான போர் காட்சியை உருவாக்க உள்ளனர்.

அந்த காட்சிகளை இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த படத்திலும் பார்த்திராத வகையில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்போகின்றனர். அதற்கான செட் அனைத்தும் தயாராகி இருக்கும் நிலையில், எஸ்கே 21 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.

Also read: அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும் 6 பெரிய படங்கள்.. உலகநாயகனுடன் மோதும் சூர்யா

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதால் அவர்களது காட்சியும் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னை படப்பிடிப்பை முடிந்தவுடன் மறுபடியும் படக்குழு காஷ்மீர் செல்ல இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தன்னுடைய படங்களில் எல்லாம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் சிறப்பாக நடனம் ஆடுவார்கள் என்பதால் இந்த படத்திலும் அவர்களுக்கென்று இருக்கக்கூடிய ஸ்டைலில் டான்ஸில் பிச்சு உதறப்போகிறார்கள். அதைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சிக்கிடாதீங்க!

Trending News