அஜித் நீங்க ரஜினியிடம் கத்துக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. பெரிய மனுஷன்னு நிரூபித்த சூப்பர் ஸ்டார்

Ajith-Rajini: சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் நான்தான் என்றைக்குமே சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் தற்போது அவர் தான் ஒரு பெரிய மனுஷன் என்பதை ஒரு விஷயத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இது அஜித்திற்கும் ஒரு பெரிய பாடமாக இருக்கிறது.

அதாவது சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் சூப்பர் ஸ்டார் புது எனர்ஜியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேடையில் கலகலப்புடன் பேசி பலரையும் ரசிக்க வைத்தார். இதில் பல விஷயங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருந்தாலும் ஒரு விஷயம் தான் பலரையும் சபாஷ் போட வைத்தது.

Also read: விஜய், கமலை காலி செய்ய போகும் 4 நாள் வசூல்.. வெறியோடு களத்தில் குதித்த ஜெயிலர்

அதாவது பீஸ்ட் படம் வெளிவந்த சமயத்தில் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதனால் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க நெல்சன் தகுதியானவர் கிடையாது என்ற பேச்சும் எழுந்தது. அது பற்றி பேசிய சூப்பர் ஸ்டார் என்னுடைய நண்பர்கள் பலரும் எனக்கு போன் செய்து நெல்சன் உங்கள் படத்தை இயக்க வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள் என கூறினார்கள். ஆனால் நான் என் முடிவிலிருந்து மாறவில்லை.

ஒரு படத்தை இவர் தான் இயக்குகிறார் என்று அறிவித்த பிறகு இயக்குனரை மாற்றினால் அவருடைய எதிர்காலம் என்ன ஆகும். இருந்தாலும் இது பற்றி தயாரிப்பு தரப்பு முடிவெடுக்க வேண்டும் என்பதால் நான் அவர்களிடமும் பேசினேன். அவர்களும் நெல்சன் இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதுதான் தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

Also read: அஜித்தின் கேரியரை காலி செய்து ப்ளாப்பான 6 படங்கள்.. காசு போட்ட முதலாளி கூட இன்னொரு வாட்டி பாக்க மாட்டாங்க

ஏனென்றால் ரஜினி நெல்சன் வேண்டாம் என்று கூறியிருந்தால் சன் பிக்சர்ஸ் அதற்கு மறுப்பு சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால் அவர் இயக்குனரின் எதிர்காலம் பற்றி யோசித்து ஜெயிலர் படத்தை தொடங்கியதுதான் அவரை பெரிய மனுஷன் ஆக காட்டி இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அஜித் கொஞ்சம் சறுக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் விடாமுயற்சி படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார்.

ஆனால் திடீரென கடைசி நேரத்தில் அவரை மாற்றி விட்டு மகிழ் திருமேனியை புக் செய்தனர். இதனால் விக்னேஷ் சிவனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு ஒரு வகையில் அஜித்தும் காரணமாக இருக்கிறார். அந்த வகையில் இந்த முக்கியமான விஷயத்தை அவர் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.

Also read: தக்‌ஷா டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம்.. நிஜ வாழ்க்கையிலும் சாணக்கியன் என உறுதி செய்த அஜித்