திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முதல் முதலாக கோடு போட்ட அஜித்.. ஜெயிலர் வரை தீயாய் பரவும் பழக்க வழக்கம்

Ajithkumar: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரியல் ஹிட் ஆகி இருக்கிறது. இயக்குனர் நெல்சன் திலிப் குமாருக்கு அவர் இயக்கிய நான்காவது படமே ரெக்கார்டு பிரேக் படமாக அமைந்துவிட்டது. இந்த படத்தின் வெற்றியை பட குழு திருவிழா போல கொண்டாடி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இந்த வெற்றி ஒரு ரெக்கார்ட் பிரேக்காக தற்போது அமைந்து விட்டது.

நடிகர் ரஜினிக்கு கடந்த சில வருடங்களாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவுமே இல்லை. அவர் நடித்த படங்கள் பொருளாதார ரீதியாக கை கொடுத்ததே தவிர, வசூலை வெளியில் சொல்லும் அளவுக்கு எல்லாம் வெற்றி பெறவில்லை. இது ரஜினிகாந்துக்கு ஒரு மிகப்பெரிய ஏக்கமாகவே இத்தனை வருடங்களாக இருந்தது.

Also Read:ஒரே படத்தில் ஒரேடியாக உயர்ந்த லோகேஷ், நெல்சனின் சம்பளம்.. இதுக்கு தான் பெரிய இடத்து சகவாசம் வைக்கணும் போல

இந்தக் குறையை போக்கும் வகையில் சமீபத்திய ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 550 கோடி வசூல் செய்து விட்டது. விரைவில் இது 600 கோடியை நெருங்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தை போல் ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்த ரஜினிக்கு, ஜெயிலர் படம் பல மடங்கு வெற்றியை கொடுத்து விட்டது.

இந்த படம் வசூல் வேட்டை ஆடி வருவதால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன், மகிழ்ச்சியோடு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு பேருக்கும் விலை உயர்ந்த கார்களை பரிசளித்து இருக்கிறார். சமீப காலமாகவே தயாரிப்பாளர்கள், இது போன்ற ஹிட் படங்கள் கொடுத்த பிறகு ஹீரோ மற்றும் இயக்குனருக்கு கார் மற்றும் பைக் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

Also Read:ஆடியோ லான்ச் வேண்டவே வேண்டாம்.. நியாயமாய் விஜய் கூறும் 5 விஷயங்களால் லோகேஷ்க்கு செக்

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பழக்கத்தை கொண்டு வந்ததே நடிகர் அஜித்குமார் தான். படம் ஹிட்டானதும் இயக்குனருக்கு கார் பரிசளிப்பதை அஜித் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போது சான்ட்ரோ கார் தான் பிரபலமான காராக இருந்திருக்கிறது. தன்னுடைய வெற்றிப்பட இயக்குனர்களுக்கு இந்த காரை வாங்கி பரிசளித்து வந்திருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

அஜித்குமார் முன்னணி ஹீரோவானதற்கு பிறகு இந்த பழக்கம் அவருக்கு வரவில்லை. அவர் வாலி படத்தில் நடித்த பொழுது, அந்த பட ரிலீஸ்க்கு பிறகு இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுக்கு கார் பரிசளித்திருக்கிறார். இதை எஸ் ஜே சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட சொல்லி இருந்தார். அதேபோன்று அமர்க்களம் திரைப்படத்தின் இயக்குனர் சரணுக்கும் அஜித் கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

Also Read:லியோ கெஸ்ட் ரோலில் வரும் மலையாள பகவதி.. பால் பப்பாளியை முழு சோற்றில் மறைத்த லோகேஷ்

Trending News