Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அமரன் வசூலில் ஏற்பட்ட சிக்கல்.. போட்டி போட்டு வசூல் செய்யும் படம்

அமரன் வசூலில் ஏற்பட்ட சிக்கல்.. போட்டி போட்டு வசூல் செய்யும் படம்

Amaran : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியானது. இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு இல்லாத அளவுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தார்கள். அதுவும் உலகநாயகன் கமல் இந்த படத்தை தயாரித்திருந்தார். ஒரு வாரத்தை கடந்த […]

Amaran : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியானது. இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு இல்லாத அளவுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தார்கள். அதுவும் உலகநாயகன் கமல் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

ஒரு வாரத்தை கடந்த நிலையில் அமரன் படம் 180 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. அதுவும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் கெமிஸ்ட்ரி படத்தில் சூப்பராக அமைந்தது. அதோடு மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அமரன் படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் வரவேற்பு ஒருபுறம் இருந்தாலும் சர்ச்சைகளும் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி முகுந்த் ஒரு பிராமினர் என்று சொல்வதில் இயக்குனருக்கு என்ன பிரச்சனை என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் அவரது குடும்பத்தினர் முகுந்த் எப்போதுமே தன்னை ஒரு இந்தியன், தமிழன் என்று சொல்லிக் கொள்ளதான் பெருமைப்படுவான்.

அமரன் படத்தின் வசூல் ஏற்பட்ட சிக்கல்

ஆகையால் நீங்கள் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட வேண்டாம் என்று முகுந்த் குடும்பத்தினர் இயக்குனரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அமரன் படத்திற்கு இன்னொரு சிக்கல் வரும்படி ஒரு படம் அமைந்திருக்கிறது. தீபாவளி அன்று துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் வெளியானது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வங்கி அதிகாரியாக துல்கர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இப்போது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தியேட்டர்கள் அதிகமாக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில் 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக அமரன் படத்தின் வசூல் சற்று குறைந்து காணப்படுகிறது. மேலும் தமிழில் சில படங்களில் துல்கர் சல்மான் நடித்திருப்பதால் அவருக்கு இங்கு ரசிகர்கள் ஏராளம். ஆகையால் தொடர்ந்து லக்கி பாஸ்கர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்‌‌.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.