சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அமரன் ரிலீசுக்கு நாள் குறித்த படக்குழு.. சென்னையில் டூயட் ஆட தயாராகிய சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan in Amaran: கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு தகுந்த உதாரணமாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். கடந்த ஆண்டு மாவீரன் மற்றும் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிவந்த அயலான் படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும், எப்பொழுதும் போல இவருடைய படத்தை ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் .

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் அமரன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியானதில் பல சர்ச்சைகள் வெடித்தாலும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் மறைந்த முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜ் பயோபிக் கதையை எடுத்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முக்கால்வாசி சூட்டிங் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மீதமுள்ள காட்சியை எடுத்து முடித்து விடுவோம் என்று பட குழு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இதில் சிவகார்த்திகேயனுக்கு மனைவியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர்களுக்கு ஒரு டூயட் பாடல் வைக்கப்பட்டிருக்கிறது.

Also read: கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

இந்த பாடலை சென்னையில் வைத்து சூட் பண்ண போகிறார்கள். இந்த ஒரு பாடல் கண்டிப்பாக அனைவரது மனதையும் ஈர்க்கும் அளவிற்கு இருக்கப் போகிறது. மேலும் மீதமுள்ள காட்சிகளை எடுத்துவிட்டு இப்படத்தை முடிக்க போகிறார்கள். அத்துடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்திற்கு வெளியிடலாம் என்று சில பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது.

ஏனென்றால் ராணுவத்திற்கும், தீவிரவாதிக்கும் நடக்கும் யுத்தங்களை மையப்படுத்தி வருவதால் சுதந்திர தினத்திற்கு வெளிலிட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். மேலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படப்பிடிப்பு முடித்துவிட்டு அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய 23வது படத்தை நடிக்கப் போகிறார்.

இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சியாகவும், எஸ்கே-யின் வெறித்தனமான மாஸ் படமாகவும் இருக்கப் போகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்கப் போகிறது. அத்துடன் இவருக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடிக்கப் போகிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன்லால் மற்றும் வித்யூத் ஜம்வால் நடிக்கப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. கூடிய விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரும்.

Also read: அஜித்தை டேமேஜ் செய்த அமரனின் விஷமிகள்.. சிவகார்த்திகேயன் கூலிப்படை செய்யும் வேலை

Trending News