இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ்,தனது எதார்த்தமான நடிப்பால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.நடிப்பில் மட்டுமின்றி நடனம்,பாடல் எனப் பன்முகத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.இந்நிலையில்,பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன்,தனுஷின் நடிப்பையும் நடனத் திறமையையும் மனதாரப் பாராட்டியுள்ளார்.அவருடைய இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய அமிதாப் பச்சன்,நானும் நடிகர் தனுஷின் மிகப்பெரிய ரசிகன்.எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டோடு நடிக்கும் அசாதாரணமான கலைஞர் தனுஷ்.மேலும்,அவர் ஒரு மிகச்சிறந்த நடனக் கலைஞரும் கூட என்று புகழாரம் சூட்டியுள்ளார்.இந்திய சினிமாவின் மூத்த நடிகரிடமிருந்து கிடைத்துள்ள இந்தப் பாராட்டு தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.பால்கி இயக்கத்தில் வெளியான “ஷமிதாப்”படத்தில் அமிதாப் பச்சனும் தனுஷும் இணைந்து நடித்திருந்தனர்.
பேச முடியாத நடிகராக தனுஷும்,அவருக்குக் குரல் கொடுக்கும் கேரக்டரில் அமிதாப் பச்சனும் நடித்திருந்தனர்.அப்போதே தனுஷின் நடிப்புத் திறமையையும் அர்ப்பணிப்பையும் அமிதாப் கவனித்துள்ளார்.
நடிப்பைத் தாண்டி “மாரி”, “திருச்சிற்றம்பலம்” போன்ற படங்களில் தனது தனித்துவமான நடனத்தாலும் தனுஷ் கவனம் பெற்றுள்ளார். பாடகர், பாடலாசிரியர்,இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மேலும்,”ராஞ்சனா” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ்,”அத்ரங்கி ரே”படத்திலும் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார்.அமிதாப் பச்சன் நான்கு முறை தேசிய விருது வென்றுள்ள நிலையில்,தனுஷ் ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்காக இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




