செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

அனிருத்தையே நாடும் 6 பெரிய தலைகள்.. என்ன தான் சொக்குப்பொடி போட்டாருனு தெரியல

தனுஷின் 3 படத்தின் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்திரன். இவருடைய ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். இவரின் இசையில் வெளியாகும் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களை ஒரே நேரத்தில் அனிருத் இசையமைக்கிறார். இதனால் ஒரே சமயத்தில் ஆறு நடிகர்களின் படங்களில் கமிட்டாகி உள்ளார் அனிருத்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவான அனைத்து படங்களிலுமே அனிருத் தான் இசை அமைத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திலும் அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த படத்திற்குப் பிறகு ரஜினி, நெல்சன் இயக்கத்தில் தலைவர்169 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்கான மாஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் படத்தில் அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் டான் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இவ்வாறு சிவகார்த்திகேயன் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இசையமைத்து வருகிறார்.

Trending News