வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சிம்புவை மட்டம் தட்டி எரிச்சலடைய செய்யும் அனிதா.. வெறியில் சக போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல ஆதரவை பெற்று வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி சிறு மாற்றங்களுடன் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இடையில் அவருக்கு இருந்த பணி சுமையின் காரணமாக தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு இந்த நிகழ்ச்சி புதிதாக இருந்தாலும் அவருடைய வழக்கமான துள்ளலும், கலகலப்பும் சேர்ந்து இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.

வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் எதார்த்தமாக உரிமையுடன் பேசும் சிம்பு அவர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்ட மறுப்பது இல்லை. வயதிலும், அனுபவத்திலும் பெரியவரான கமல்ஹாசன் அளவுக்கு இல்லாவிட்டாலும் சிம்பு இந்த நிகழ்ச்சியை எந்த குறையும் இல்லாமல் திறமையாகவே நடத்தி வருகிறார்.

ஆனால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா, ஸ்ருதி போன்ற போட்டியாளர்கள் மட்டம் தட்டி பேசிய வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதற்கு முந்திய பிக்பாஸ் சீசனில் கூட அனிதா ரொம்பவும் வாய் துடுக்காக பேசி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

அது போக இந்த நிகழ்ச்சியிலும் அளவுக்கு அதிகமாக பேசுவது, சண்டையிடுவது என்று பார்வையாளர்களை எரிச்சல் படுத்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது சிம்புவுக்கு ஒன்றும் தெரியாது என்று பேசி அனைவரின் கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார். அது என்னவென்றால் ஸ்ருதி, சிம்புவிடம் பேசியது அவருக்கு புரிந்ததா இல்லையா என்று அனிதா உடன் சேர்ந்து பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்.

இதில் அனிதா ரொம்பவும் புத்திசாலி போல் சிம்பு பிக் பாஸுக்கு புதுசு அதனால நம்ம பேசுறது அவருக்கு புரியாது. ஆனால் கமல் சார் 5 சீசன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியயதால் அவருக்கு எல்லாம் புரியும் என்று மெத்தனமாக பேசினார். மேலும் அவர் ஸ்ருதியிடம் நீ சிம்புவிடம் என்ன சொன்ன என்று எனக்கு தெரியல ஆனா அது சிம்புவுக்கு நிச்சயம் புரிந்து இருக்காது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் தற்போது அனிதாவை கண்டபடி பேசி கழுவி ஊற்றி வருகின்றனர். நீ என்ன அவ்ளோ புத்திசாலியா, உனக்கு சிம்பு மேல பொறாமை என்று அவருக்கு எதிராக ரசிகர்கள் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கூட அனிதா பிக்பாஸ் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் இவர் சிம்புவை பற்றி பேசி தற்போது மீண்டும் எதிர்ப்புக்களை சம்பாதித்து இருக்கிறார்.

Trending News