Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என்னுடைய படங்களில் இனி இது இடம்பெறும்.. மாஸ் காட்டும் லோகேஷ்!

2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். சில படங்களை மட்டுமே இயக்கினாலும் அவர் கையில் எடுப்பதெல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் என்பதால் வெகு சீக்கிரமே தமிழ் சினிமாவின் டாப் […]

2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். சில படங்களை மட்டுமே இயக்கினாலும் அவர் கையில் எடுப்பதெல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் என்பதால் வெகு சீக்கிரமே தமிழ் சினிமாவின் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் அதன்பின் தற்போது திரையரங்கில் பின்னிப் பெடல் எடுத்துக்கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம்.

இவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்த படமான தளபதி விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். லோகேஷ் படங்களில் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோவான ஒருவரை மட்டுமே வைத்து இயக்க மாட்டார்.  அப்படித்தான் இவருடைய படங்களான கைதி படத்தில் நரேன் கார்த்தி.

அதைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் விஜய் சேதுபதி தற்போது வெளியாகி எடுக்கும் விக்ரம் படத்தில் கமலஹாசன்-விஜய் சேதுபதி-பகத் பாசில்-சூர்யா என பல பிரபலங்களை தன்னுடைய ஒரே படத்தில் நடிக்க வைத்திருப்பார். லோகேஷ் கனகராஜ் இன் இந்த அணுகுமுறை ஒவ்வொரு ஹீரோவுக்கும் தனித்தனியாக இருக்கும் ரசிகர்களை ஒன்று சேர்ப்பது சினிமாவில் வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது.

ஆகையால் மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து தளபதி 67-வது படத்தில் விஜயுடன் சூர்யா இணையப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படி லோகேஷ் படங்களில் பல்வேறு பிரபலங்களை இணைப்பது மட்டுமல்லாமல் கைதி படத்தில் இருக்கும் ஒரு சில கதாபாத்திரத்தை விக்ரம் படத்தில் கொண்டு வந்தார் இதனால் விக்ரம், கைதியின் இரண்டாம் பாகம் எனவும் சொல்லப்பட்டது.

இப்படி லோகேஷ் படங்களில் ஒரு சில ஒற்றுமைகள் தொடர்கதையாகுவதால், ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (Lokesh Cinematic Universe-LCU)’ என்ற பெயருடன் இனி வரும் காலங்களில் கைதி, விக்ரம் படங்களின் தொடர்ச்சியாகவோ அதன் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியா தொடர்பாகவோ படம் எடுத்தால், அதில் ‘லோகேஷ் சினிமாட்டிக் இனி யுனிவர்ஸ்(LCU)’ என்ற பெயரை பயன்படுத்துவேன் என தற்போது லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விக்ரம் படத்திற்கு பிறகு வேற லெவலில் மாஸ் கட்டிக்கொண்டிருக்கும் லோகேஷ் அடுத்தடுத்த படங்களில் பெரிய பெரிய தலைகளுடன் இணைய இருப்பதால்தான் இயக்கவிருக்கும் படங்களுக்கே ஒரு தனி பெயரைக் கொடுத்து தனிக்காட்டு ராஜாவாகவே மாறி உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.