சூர்யாவைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் மறைத்து வைத்துள்ள நடிகர்.. சம்பவம் பண்ணும் லோகேஷ்

தற்போது எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான். கமலஹாசன் அரசியல், தொலைக்காட்சிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு முழு வீச்சாக சினிமாவில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கமலின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விக்ரம் படம் அவற்றையெல்லாம் பூர்த்திசெய்யும் வகையில் உருவாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் கமலஹாசன் ஒரு இளைஞனை போல அதே எனர்ஜியுடன் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது. படப்பிடிப்பு வரை லோகேஷ் மறைத்து வைத்திருந்த இந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரிந்ததால் ட்ரெய்லரில் சூர்யா இடம்பெற்றிருந்த காட்சியை வைத்திருந்தார்.

மேலும் விக்ரம் படத்தில் பல சுவாரஸ்யம் தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதாக செய்தித்தாள்களில் தகவல் வெளியானது.

ஆனால் படக்குழு அதை உறுதிப்பட இன்னும் தெரிவிக்கவில்லை. இதனால் சிவகார்த்திகேயனையும் விக்ரம் படத்தில் லோகேஷ் மறைத்து வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தினால் தான் கமலஹாசன் சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளியானால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரியவரும். ஆனால் கண்டிப்பாக விக்ரம் படம் கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இதை ட்ரெய்லரிலேயே உறுதிப்படுத்தியுள்ளார் லோகேஷ்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →