திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

பக்கா கிராமத்தானாக மாறும் ஆர்யா.. எதிர்பார்ப்பை மிஞ்சிய அடுத்த பட அப்டேட்

ஆர்யாவின் நடிப்பில் கடைசியாக கேப்டன் திரைப்படம் வெளிவந்தது. ஹாலிவுட் பாணியில் படு மிரட்டலாக வெளிவந்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஆர்யாவின் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் ஆர்யா இயக்குனர் முத்தையாவுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். கிராமத்து கதைகளில் அதிக ஆர்வம் காட்டும் முத்தையா சமீபத்தில் விருமன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி, அதிதி சங்கர் நடித்திருந்த அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also read:பரமபதம் விளையாட்டு போல் மாறிய ஆர்யாவின் சினிமா கேரியர்.. ஒரே படத்தால் அதல பாதாளத்திற்கு சென்ற சம்பவம்

அதைத்தொடர்ந்து தற்போது அவர் ஆர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சித்தி இதானி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஆர்யாவுடன் சித்தி இதானி

arya-siddhi idnani
arya-siddhi idnani

இப்படி மெகா கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாக இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முத்தையாவின் பாணியில் இந்த திரைப்படமும் பக்கா கிராமத்து கதையாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்யா இந்த படத்தில் முரட்டு கிராமத்தானக கலக்குவார் என்று தெரிகிறது.

Also read:தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் பாலா.. ஆர்யாவை தொடர்ந்து மாட்டிக் கொண்ட சூர்யா

இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கு இந்த படம் வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இப்படத்தின் சூட்டிங் பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது.

ஆர்யா 34 பூஜை

arya-muthaiya
arya-muthaiya

அதில் முத்தையா, ஆர்யா, சித்தி இதானி, சாண்டி மாஸ்டர் உட்பட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also read:ஆர்யாவுக்கு மோசமான பெயரை வாங்கி கொடுத்த 5 படங்கள்.. கஷ்டப்பட்டு நடிச்சும் பிரயோஜனம் இல்லை

- Advertisement -spot_img

Trending News