thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

gossip-new

பணத்திற்காக மானத்தை விற்ற நடிகை.. லிப் லாக்குக்கு 10 டேக்கா என வெறுப்பான காதல்

நடிகை சின்னத்திரையில் இருந்து வந்திருந்தாலும் இப்போது எக்கச்சக்க பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது. அவருடைய சம்பளம் குறைவு என்றாலும் டாப் நடிகைகளுக்கு இணையாக இப்போது அவரும்

gossips

5 நாளைக்கு 20 லட்சமா.? முரட்டு நடிகரை வைத்து காசு பார்த்த நடிகை

முரட்டு வில்லன் நடிகர் ஒருவர் இப்போது படங்களில் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் நடிகர் பொம்பள விஷயத்தில் கொஞ்சம் வீகானதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு

gossip-image

அப்பாவின் சொத்தை வாரி இறைக்கும் மகன்.. அந்தரங்க தேவைக்காக கோடிகளை செலவழிக்கும் நடிகர்

அப்பா சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நிலையில் தனது வாரிசுகளுக்காக கஷ்டப்பட்டு கோடிகளில் சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் அவருக்கு பேரும், புகழும் இருந்தது.

gossips

மது போதையில் ரோட்டிலேயே மட்டையான நடிகை.. வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஹீரோ

நடிகை ஆரம்பத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஹீரோயின்களின் தோழியாக நடித்து வந்தார். அதன் பிறகு அவரது நடிப்பு திறமையை பார்த்து ஹீரோயின் வாய்ப்பு வர அதை