சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பெண்களை வெறுத்து சைக்கோவாக வேட்டையாடிய 7 படங்கள்.. அதிகமா கதகளி ஆடிய கமல்

தமிழ் சினிமாவின் பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பெண்களை வெறுத்து சைக்கோ மாறி வேட்டையாடிய படங்களும் வெளியாகி உள்ளது. அவ்வாறு வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களின் வரிசையை பார்க்கலாம்.

சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் சைக்கோ கில்லர் கதை இது. இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளிவிழா கண்டது.

கலைஞன்: கமலஹாசன், பிந்தியா, நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கலைஞன். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்து இருந்தது. இப்படத்தில் தமிழ் பாப் பாடகர் இந்திரஜித்தை சுற்றி கதை நகர்கிறது. இந்தர்ஜீத்தின் குழுவில் உள்ள சந்தியா என்ற நடனக் கலைஞரின் மரணத்துடன் படம் ஆரம்பித்து அடுத்தடுத்த பெண்களில் மரணம் அரங்கேறுகிறது.

ஆளவந்தான்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தனது சிறுவயதிலேயே சித்தி கொடுமையால் பெண்கள் மீது கோபம் கொள்கிறார் கமல்.

மன்மதன்: ஏஜே முருகன் இயக்கத்தில் சிம்பு, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் சைக்கோ த்ரில்லர் படம். இப்படம் 365 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

வேட்டையாடு விளையாடு: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமலஹாசன், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்யும் இரண்டு சைக்கோ வில்லன்களை கமல் எப்படி துப்பறிகிறார் என்பதே படத்தின் கதை.

நடுநிசி நாய்கள்: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வீரபாகு, சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நடுநிசி நாய்கள். தந்தையின் செய்கையால் கதாநாயகன் மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சு பாம்பாக மாறும் படம்தான் நடுநிசி நாய்கள்.

ராட்சசன்: ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடித்து பிரமாண்ட வெற்றிபெற்ற படம் ராட்சசன் இந்த படத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பழிவாங்கும் விதமாக சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள் தியேட்டரில் ரசிகர்களை மிரள வைத்த படத்தில் இந்த படம் மிக முக்கியமான பங்கு உண்டு.

சைக்கோ: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படம் பெண்களைக் கடத்தி தலை மட்டும் தனியே வெட்டி பிறகு, தலையில்லாத உடலை மட்டும் வீசும் ஒரு சைக்கோ கொலைகாரனை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

Trending News