Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை வெளியிட்ட படக்குழு.. கேப்டன் மில்லரை முந்த முடிஞ்சதா?.

அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை வெளியிட்ட படக்குழு.. கேப்டன் மில்லரை முந்த முடிஞ்சதா?.

அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரம்.

Ayalan movie official collection details: ஏலியன் கான்செப்டில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் கடந்த 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியானது. இந்த ரெண்டு படங்களுக்கு இடையே தான் வசூலில் கடும் போட்டி நிலவிய நிலையில், இப்போது அயலான் படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தற்போது வரை அயலான் படம் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருப்பதாக படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கிட்ஸ் முதல் 60’ஸ் வரை, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனுக்கு தான் நிறைய ஃபேன்ஸ் இருப்பதால் இந்த வருஷ பொங்கலுக்கு அயலான் செம ட்ரீட் ஆக அமைந்தது.

குழந்தைகளுக்கும் குடும்ப ஆடியன்ஸுக்கும் அயலான் படம் தான் பிடித்ததால் அந்த படத்தை தான் விரும்பி பார்க்க தியேட்டருக்கு குவிந்தனர். அந்த அளவிற்கு இந்த படத்தில் குழந்தைகளை கவரும் விதத்தில் படம் முழுக்க நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்துள்ளது.

அயலான் அதிகாரப்பூர்வ வசூல் விபரம்

அதே சமயம் துப்பாக்கி சத்தமும், ரத்தகளரியும் நிறைந்த தனுஷின் கேப்டன் மில்லர் படம் இளசுகளுக்கு பிடித்தது போல் பக்கா ஆக்சன் படமாக அமைந்துள்ளது. இதனால் இதன் வசூலும் சக்கை போடு போடுகிறது. தற்போது வரை கேப்டன் மில்லர் 70 கோடி வசூலை கடந்துள்ளது.

அப்படி என்றால் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலானை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பின்னுக்குத் தள்ளி உள்ளது. கூடிய விரைவில் கேப்டன் மில்லர் படக் குழுவும் உலக அளவில் எவ்வளவு கலெக்ஷன் ஆகி இருக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரம்

Ayalan movie official collection-cinemapettai
Ayalan movie official collection-cinemapettai
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.