Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ப்ளே பாய் மூடில் பாலா.. ஹீரோயினுடன் தனி ஹோட்டலில் தங்கியதால் வந்த வினை

ப்ளே பாய் மூடில் பாலா.. ஹீரோயினுடன் தனி ஹோட்டலில் தங்கியதால் வந்த வினை

சினிமாவில் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு அருகிலேயே உள்ள ஹோட்டலில் நடிகர், நடிகைகளுக்கு அறைகள் புக் செய்யப்படும். அப்போதுதான் அவர்கள் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்பதால் இவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது […]

சினிமாவில் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு அருகிலேயே உள்ள ஹோட்டலில் நடிகர், நடிகைகளுக்கு அறைகள் புக் செய்யப்படும். அப்போதுதான் அவர்கள் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்பதால் இவ்வாறு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இப்போது சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 41வது படம் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

மேலும் படத்தில் சூர்யா படகோட்டி ஆக நடிக்கிறார். இதற்காக சூர்யாவுக்கு கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்துள்ளனர். இதனால் சூர்யா எளிதில் படப்பிடிப்புக்கு வந்து செல்கிறார்.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் பாலா மற்றும் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி இருவருக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்துள்ளார்கள். அதாவது கன்னியாகுமரியை விட்டுவிட்டு நாகர்கோவிலில் ரூம் போட்டு இருக்கின்றனர்.

இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்து தான் படப்பிடிப்பில் அவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். இதனால் தற்போது மிகுந்த சிரமத்துடன் தான் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் ஏன் ஹீரோவுக்கு மட்டும் அருகில் உள்ள ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு, மற்ற நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்கு எவ்வளவு தொலைதூரத்தில் ரூம் புக் செய்ய காரணம் என்ன என்று தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.