Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

உலகநாயகன் இடத்தை பிடிக்கும் சிம்பு.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

உலகநாயகன் இடத்தை பிடிக்கும் சிம்பு.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதனால் கால்ஷீட் பிரச்சனையால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 6 இல் மீண்டும் நான் தொகுத்து வழங்குவேன் என உறுதியளித்தார். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என பெரிய கேள்வி எழுந்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பான போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வார நிகழ்ச்சியை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என்ற செய்தி இணையத்தில் வெளியானது. ஆனால் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக நம்பக தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு தற்போது வெந்து தணிந்து காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கமலஹாசன், சிம்புவை ஒப்பிட்டு நிறைய செய்திகள் வந்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமலஹாசன் இடத்தை சிம்பு பூர்த்தி செய்கிறாரா என்பதை இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொருத்திருந்து பார்க்கலாம். ஆயிரம் பேர் வந்தாலும் ஆண்டவர் போல் வருமா என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.