சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

ஒரே நாளில் நடக்கும் நிகழ்வை படமாக்கி வெற்றிகண்ட 5 இயக்குனர்கள்.. லோகேஷ் இதுல ஸ்பெஷலிஸ்ட்!

Best Tamil Films Which Happens in One day: சில படங்கள் படம் முடிந்த பின்னும் தொடர்ந்து அதன் தாக்கம் சில நாட்களுக்கு மனதில் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் சில.

கைதி: காதல், பாடல், நகைச்சுவை என மிக்செட் காம்பினேஷன் ஆக இல்லாமல் இதில் கதாபாத்திரங்களையும் அழுத்தமாக அமைத்து கைதி டில்லி( கார்த்தி)யை பார்க்கும் அனைவரையும் கைதியின்  வலியை உணர வைத்திருப்பார் இயக்குனர்.  நல்லவர்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து கடைசி வரை பதற்றமாகவே  வைத்திருந்தார்.

ஆரண்ய காண்டம்: “எது தேவையோ அதுவே தர்மம்” என படத்தின் டேக் லைனை படம் முழுவதும் இயல்பான கதாபாத்திரங்களுடன் வெளிப்படுத்தி முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருப்பார் இப்படத்தின் இயக்குனர். சோகத்தில் இருக்கும் போது சிரிப்பை வரவழைக்கும் பிளாக் காமெடி வகையை இதில் புகுத்தி இருந்தார். இப்படத்தில் மனித உணர்வுகளை சினிமாடிக் ஆக இல்லாமல் அனைத்து கதாபாத்திரங்களும் இயல்பாக வெளிப்படுத்தி சராசரி மனிதனாகவே வாழ்ந்திருந்தனர்.

தூங்காவனம்: 2015 இல் கமல் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் கண்களை அயர விடாமல்,நாயகன் நல்லவரா கெட்டவரா என்பதை இறுதிவரை சஸ்பென்ஸ் உடன் கொண்டு சென்றது.போலீசாக வரும் கமலை “வேலியே பயிரை மேய்ந்தது போல் காட்டி” இறுதியில்  கடத்தல் கும்பலிடம் இருந்து மகனை மீட்டாரா என்று மீதி கதையை திரில்லராக கூறியிருந்தது.

Also Read: சின்ன தூண்டில்ல மொத்த கஜானாவையும் ரொப்பிய 5 படங்கள்.. ஜம்முனு செட்டிலான அசோக் செல்வன்

துணிவு: மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் ஆசையை தூண்டி விட்டு கொள்ளை அடிக்கும் வங்கிகளின் முகத்திரையை கிழித்திருக்கும் படமே துணிவு.  அஜித்தை பேங்கில் கொள்ளையடிக்கும் திருடனாக காண்பித்து உண்மையான திருடனை கண்டுபிடித்து உலகறிய செய்வதே நாயகனது வேலையாக இருந்தது.”மனுஷன் ஏன் சுயநலமா இருக்கிறான், சுயநலமா இருக்கிறதால தான் அவன் மனுசனாவே இருக்கான்” என்பது போன்ற வசனங்கள் அனைவரின் மனதிலும்  தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

மாநகரம்: தமிழில் புதிய முயற்சியாக சென்னையை பல கோணங்களிலும் காட்டி  கதையின் விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சம் இல்லாது நகர்த்தி இருந்தார் லோகேஷ். அவர் சென்னை வந்த புதிதில் சந்தித்த நிகழ்வுகளையும் இப்படத்தில் புகுத்தி அனைவரையும் சபாஷ் போட செய்திருந்தார். ஒரே நாளில் பல கோணங்களில் பல பிரச்சனைகள் என்று வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து சென்னை பாஷையோடு பதற்றத்துடன் மாநகரை வலம் வர செய்திருப்பார் லோகேஷ்.

ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் நாம் அடிக்கடி நினைவு கூறும் பீல் குட் மூவிசாக  எப்போதும் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

Also Read: 4 படங்களில் ரஜினியுடன் கவுண்டமணி செய்த அலப்பறைகள்.. எஜமானுடன் தூக்கு சட்டிக்கு அலைந்த வெள்ளயங்கிரி

- Advertisement -spot_img

Trending News