சூட்டோடு சூடாக துவங்கப்படும் பிக் பாஸ் சீசன்6.. எப்போது.? யாரு ஹோஸ்டிங் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே விரும்பிப் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சி, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. எனவே ஆறாவது சீசனை வரும் ஜூன் மாத இறுதி வாரத்தில் துவங்க விஜய் டிவி திட்டமிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இதுவரை விஜய் டிவியில் நடந்து முடிந்த எல்லா சீசன்களையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய கமலஹாசன் அவர்களே பிக்பாஸ் 6-வது சீசனையும் தொகுத்து வழங்கப்போவது இந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஓடிடி-யில் முதல்முதலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடக்கத்தில் கமல் தொகுத்து வழங்கியதும், அதன்பின் ஒரு சில காரணத்தினால் கமல் விலகிய பிறகு, சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

பல்வேறு விமர்சனங்களுக்கு இடையில் கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், முதல் ரன்னர் அப் நிரூப் எனவும் தேர்வு செய்யப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது. எனவே பிக்பாஸ் அல்டிமேட் நிறைவடைந்த உடனேயே சூட்டோடு சூடாக பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியும் ஜூன் இறுதியில் துவங்க இருப்பதும்.

யார் யார் பங்கேற்பது என்ற தகவலும் தற்போது சோஷியல் மீடியாவை வைரலாகி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ விக்ரம் படப்பிடிப்பை முடித்து விட்டு கமல், பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் போதும் என்று ஒரு சில ரசிகர்கள் அடுத்த சீசனுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் பிக் பாஸ் அல்டிமேட்டில் மிக அற்புதமாக ஹோஸ்டிங் செய்த சிம்புவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக குவிந்துள்ளது. இதனால் கமல்ஹாசனைப் ஓவர்டேக் செய்து சிம்பு அந்த இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →