வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷ், சிம்புவை ஓரங்கட்டி சாக்லேட் பாய்வுடன் இணையும் பாலிவுட் நடிகை.. நொண்டி சாக்கு சொல்லி கழட்டிவிட்ட சம்பவம்

Actor Dhanush-Simbu: இரண்டாம் நிலை டாப் ஹீரோக்களான சிம்பு மற்றும் தனுஷ், தன் அடுத்தக்கட்ட படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் படங்களுக்கு பாலிவுட் நடிகை ஒருவர் கால்ஷீட் கொடுக்காமல் புறக்கணித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியன் 2 படத்தின் எதிர்பார்ப்பிற்கு பிறகு கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் தான் எஸ் டி ஆர் 48. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.

Also Read: ஹீரோவை பாடாய்படுத்தும் சீரியல் நடிகை.. பட வாய்ப்புக்காக செய்யும் எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்

இந்நிலையில் படத்திற்கு சிம்பு கங்கனா தான் ஹீரோயின் ஆக இருக்க வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார். அதற்காக அப்படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கங்கனா சிம்புவுடன் நடிக்க கூடாது என்பதற்காகவே சிம்புவை விட அதிக சம்பளம் கேட்டுள்ளார்.

அதை குறித்து மேல் முறையீட்டுக்காக மீண்டும் முயற்சி செய்தபோது அவருடன் சேர்ந்து நடிக்காததற்கு என்னென்ன வழியோ அதை எல்லாம் செய்து வருகிறாராம். மேலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் எதிர்பார்ப்புக்கு பிறகு இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் தனுஷ் 50.

Also Read: குடிபோதையில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர்.. மனவேதனையில் துடிக்கும் வெற்றிமாறன்

கேங்ஸ்டர் படமாக எடுக்கப்படும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளார்கள். அவ்வாறு இருக்க இவர் படத்திலும் ஹீரோயின் ஆக கங்கனா இடம்பெற வேண்டும் என்ற ஆசை தனுஷ் இருக்கும் இருந்ததாம்.

சிம்புவிற்கு கூறியவாரே சில நொண்டி சாக்கு கூறி தவிர்த்து வந்திருக்கிறார் கங்கனா. இதுதான் ஏன் என்பதை புரியாமல் திகைத்து வருகின்றனர் ரசிகர்கள். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் இவர்களின் படங்களை ஓரம் கட்டி விட்டு 8 வருடத்திற்கு பிறகு மாதவன் உடன் ஜோடியாக தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் 2015ல் தானு வெட்ஸ் மனு என்ற படம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஐஸ்வர்யா போதைக்கு பலிகாடாகும் கண்ணன்.. கடனை அடைக்க செய்த மட்டமான வேலை

Trending News