அந்தரங்க தொல்லை கொடுத்தவருக்கு விருதா.? வைரமுத்துவின் உயரிய விருதை அசிங்கப்படுத்திய பிரபலம்!

பிரபல மலையாள கவிஞரும், பாடகருமான ஓஎன்வி அவர்களின் பெயரில் தொடர்ந்து வாழ்க்கையில் சாதித்து வரும் பிரபலங்களுக்கு இப்படிப்பட்ட உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தற்போது வைரமுத்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் மலையாள பிரபல மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த இந்த விருதை தமிழர்களுக்கு கொடுத்துள்ளது. இதுவே முதல் முறை இதனால் பலரும் வைரமுத்து அவர்களுக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மலையாள நடிகை பார்வதி பிரபலத்திற்கு எதிராக அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது ஓஎன்வி விருது ஒரு உயரிய விருது, இந்த விருதை தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

onv kurup awared
onv kurup awared

மேலும் ஓஎன்வி அவர்கள் ஆற்றிய தொண்டு மிக பெரியது. அது யாருடனும் ஒப்பிட முடியாது. இப்படிப்பட்ட கவுரமான விருதை அந்தரங்க தொல்லையில் சிக்கியவர்களுக்கு எப்படி கொடுக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சின்மயி வைரமுத்துவிற்கு அந்தரங்க தொல்லை கொடுத்ததாக பலமுறை கூறியுள்ளார். ஆனால் இந்த விருது வைரமுத்துவிற்கு கிடைத்ததற்கு சின்மயம் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

பார்வதி மறைமுகமாக சொன்ன இந்த விஷயம், தற்போது அனைவரும் வைரமுத்து தான் கூறுகிறார் என வெளிப்படையாகவே அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.