இதுதான் என் வீடு! இதை விட்டு எங்க போவேன்.. சிவாஜி பட ரேஞ்சில் சமந்தா பதில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 4 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து பெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இதனைப் பற்றி சமந்தாவிடம் கேட்டபோது இது எதுவும் உண்மை இல்லை நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் தேவையில்லாமல் வதந்தி பரவி வருகிறது என வெளிப்படையாக கூறியிருந்தனர். மேலும் நாகசைதன்யா ஒரு பேட்டியில் சினிமாவை பற்றி வீட்டில் எதுவும் பேசிக் கொள்ள மாட்டோம் இந்த பழக்கத்தை தனது தந்தையிடம் தான் கற்றுக் கொண்டேன் என கூறியிருந்தார்.

அதன்மூலம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து பெறப்போவதில்லை என்பது தெளிவானது. தற்போது மீண்டும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சமந்தா சமூகவலைதள பக்கத்தின் மூலம் ரசிகர் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது சமந்தா மும்பையில் செட்டில் ஆகப் போகிறீர்கள், இனிமேல் ஹைதராபாத் வர மாட்டீர்களா என அந்த ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா மும்பையில் செட்டில் ஆகப்போகிறேன் என வரும் செய்திகள் பொய்யானவை ஹைதராபாத் தான் என்னுடைய வீடு எனவும், இனிமேல் எப்போதும் என்னுடைய வீடு ஹைதராபாத் தான் எனவும் கூறியுள்ளார்.

தற்போது சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் சமந்தா அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.