வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாதிய பெருமை பேசிய 7 தமிழ் படங்கள்.. நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்

Caste Pride Tamil Movies: சமீபத்தில் நடந்த மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் சாதிய பெருமை பேசிய படங்களை பற்றி நிறைய பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் மாரி செல்வராஜ் அந்த விழாவின்போது தேவர் மகன் படத்தைப் பற்றி பேசியது தான். தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் சாதிய பெருமை, சாதிய விழிப்புணர்வு பற்றியும் பேசி இருக்கின்றன.

தேவர் மகன் : தென் மாவட்டங்களில் உயர் சாதியாக பார்க்கப்படும் இனத்தை சேர்ந்த இரண்டு அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை பற்றிய பேசிய திரைப்படம் தேவர்மகன். இந்த படத்தில் வரும்’ போற்றி பாடடி பொன்னே’ என்னும் பாடல் இன்று வரை பல நிகழ்ச்சிகளில் சாதிய பெருமையை பேசுவதற்காக ஒலிபரப்பப்படுகிறது. இந்த படத்தைப் பற்றிய சர்ச்சை இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Also Read:இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாமன்னன்.. உதயநிதியால் கிளம்பிய அடுத்த பிரச்சினை

சின்ன கவுண்டர் : கேப்டன் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சின்ன கவுண்டர்.  குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த விஜயகாந்த் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவராக இருப்பது போலவும், அவருக்கு ஏற்படும் இன்னல்களை சுற்றி எடுக்கப்பட்ட கதை தான் இந்த படம். இதில் மனோரமா சுகன்யாவை பார்த்து அந்த சாதியை பெருமையாக பேசி இருப்பார்.

நாட்டாமை : தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட பரம்பரை பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் நாட்டாமை. இந்த படத்தில் பஞ்சாயத்து வசனங்களில் நிறைய சாதி பெருமை பேசுவதாக இருக்கும். படத்திற்கு நாயகனாக முதன் முதலில் கே எஸ் ரவிக்குமார் ரஜினியை தான் நடிக்க அணுகினார். ஆனால் இது போன்ற கதையில் நடித்து ஏதேனும் சர்ச்சை வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் ரஜினி நடிக்கவில்லை.

வேதம் புதிது: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேதம் புதிது. இரண்டு மாற்று சமூகத்தினருக்கு இடையே உருவான காதலால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி எடுத்துரைத்த திரைப்படம் இது. இரண்டு சாதிகளை பற்றியும் படம் முழுக்க காட்டி இருந்தாலும், இறுதியாக தன்னுடைய வசனங்களால் இது போன்ற சாதி பெருமைகளுக்கு சவுக்கடி கொடுத்திருப்பார் இயக்குனர்.

Also Read:கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

கொம்பன்: பொதுவாக இயக்குனர் முத்தையா எடுக்கும் அத்தனை திரைப்படங்களிலுமே தென் மாவட்டத்தை சேர்ந்த குறிப்பிட்ட இனத்தைப் பற்றி ரொம்பவும் பெருமையாக பேசி இருப்பார். இதனாலேயே இந்த படங்கள் அந்த சமூகத்தினரால் நல்ல வரவேற்பையும் பெரும். அந்த வரிசையில் வந்த திரைப்படம் தான் கார்த்தி, லட்சுமி மேனன் மற்றும் ராஜ்கிரண் நடித்த கொம்பன்.

எஜமான்: நாட்டாமை படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே போன்று ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டதன் காரணமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் எஜமான். இந்த படமும் கொங்கு நாட்டை சேர்ந்த  குறிப்பிட்ட இனம் மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை, சச்சரவுகளை பற்றி எடுத்து சொன்ன திரைப்படம்.

பருத்திவீரன் : நடிகர் கார்த்திக்கு முதல் படமே மிகப் பெரிய அடையாளமாக அமைந்தது பருத்திவீரன். இந்த படமும் முழுக்க முழுக்க தென் மாவட்டத்தைச் சேர்ந்த  சமூகத்தை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படம். இதிலும் சாதிய பெருமைகள் பேசும் வசனங்கள் இருக்கும். படத்தின் ஃப்ளாஷ்பேக்கில் கார்த்தியின் அப்பா வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்ட கதை இது.

Also Read:உயிர் போகும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் மாமன்னன் ரிலீஸ்.. முக்காடு போட வைக்கும் உதயநிதி

Trending News