Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக் லைஃப் தோல்விக்கு அரசியல் காரணமா.? ஆதரிக்கும் பிரபலம்

தக் லைஃப் தோல்விக்கு அரசியல் காரணமா.? ஆதரிக்கும் பிரபலம்

Kamal : மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது தக் லைஃப் படம். முதல் நாளே இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் பெரிய அளவில் வசூல் […]

Kamal : மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது தக் லைஃப் படம். முதல் நாளே இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை.

அதுவும் கமலுக்கு இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் என தொடர் தோல்வியை கொடுத்திருக்கிறது. அதேபோல் தான் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூர்யா நடிப்பில் எடுக்கப்பட்ட கங்குவா படமும் இணையத்தில் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறியது.

இதற்கெல்லாம் காரணம் அரசியல் தான் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருக்கிறார். இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், சிம்புவின் வெந்த தணிந்தது காடு, கமலின் இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறார்.

தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக பேசிய பிரபலம்

இவர் அண்மையில் பேட்டி ஒன்று கூறுகையில் சூர்யா மற்றும் கமல் படங்கள் தோல்வி பெறுவதற்கு அரசியல் தான் காரணம். அதுவும் தக் லைஃப் படம் வெளியான அரை மணி நேரத்திலேயே இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.

மேலும் இதற்கு கமலின் அரசியல் தரப்பு மற்றும் கமலின் ரசிகர்கள் எதிர்ப்பாக நின்றாலும் அதை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். நன்றாக உள்ள படங்களை வேண்டும் என்றே இதுபோன்று செய்து வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வாறு ஜெயமோகன் தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். கமல் ரசிகர்களுக்கே இந்தப் படம் பிடிக்கவில்லை என்ற போது எதற்காக தேவையில்லாமல் இவர் சர்ச்சையை கிளப்புகிறார் என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.