எதிர்பார்த்த 3 படங்களுமே மண்ணை கவ்வியது.. உங்களுக்கெல்லாம் நோ தேசிய விருது என சாத்தப்பட்ட சட்டர்

69th National Award: 2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் மூன்று படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மூன்று படங்களுக்கும் அவார்ட் கிடைக்காமல் மண்ணைக் கவ்வியது.

தமிழில் 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சூர்யா நடித்த ஜெய் பீம், தனுஷ் நடித்த கர்ணன், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை போன்ற மூன்று படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் உங்களுக்கெல்லாம் நோ என சற்றும் எதிர்பாராத ‘கடைசி விவசாயி’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டியனுக்கும் ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் பட குழுவினருக்கு சோசியல் மீடியாவில் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

கடந்த முறை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் மட்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை என 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. அதே போல் இந்த முறையும் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு விருதுகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அது மட்டுமல்ல பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்திற்கும் விருது கிடைக்கும் என ஆர்வத்துடன் இருந்தனர். ஏனென்றால் இதில் கபிலன் கேரக்டரில் ஆர்யா கனக்கச்சிதமாக பொருந்தி நடித்தார். இதற்காக அவர் தன்னுடைய உடல் அமைப்பிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி, அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். ஆகையால் சிறந்த நடிகருக்கான விருது இந்த முறை ஆர்யாவிற்கு கிடைக்கும் என்றும் நினைத்தனர்.

ஆனால் இவர்களது நினைப்பில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டது போல், சைடு கேப்பில் கடைசி விவசாயி திரைப்படம் தேசிய விருதை தட்டி தூக்கி சென்று விட்டது. இந்த முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர் எனும் புதிய சரித்திரத்தை புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் படைத்துள்ளார். இந்த வருடம் தமிழ் நடிகர்களுக்கு எந்த விருதும் வழங்கப்படாமல் சட்டர் சாத்தப்பட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →