சினிமா செய்திகள்

ஃபேன் பாயாக சம்பவம் செய்த 4 இயக்குனர்கள்.. அஜித்துக்கு கொடுத்த மாஸ் ஹிட்

By Arun · 13 ஏப் 2025 · Updated 13 ஏப் 2025
adhik-ajith

Ajith : சிறு வயதிலிருந்தே ஒரு நடிகரை தனது ஹீரோவாக நினைத்து வளர்ந்து வரும் நிலையில் அவர்களின் படங்களை பிற்காலத்தில் எடுப்பது பாக்கியம்தான். தன்னுடைய ஹீரோவுக்கு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதுண்டு.

ஒரு ஃபேன் பாயாக சம்பவம் செய்த இயக்குனர்களை பார்க்கலாம். விஜய்யின் தீவிர ரசிகர் தான் அட்லீ. சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை எடுத்திருந்தார்.

அதிலும் விஜய்யின் ஃபேன் பாய் என்பதை மெர்சல் படத்தில் நிரூபித்திருந்தார். அடுத்ததாக பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தற்போது சூர்யாவின் ரெட்ரோ படத்தை இயக்கியிருக்கிறார்.

ஃபேன் பாயாக சம்பவம் செய்த 4 இயக்குனர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் பேட்ட படத்தை எடுத்திருந்தார். இந்தப் படம் வேற லெவலில் உருவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சிறுவயதில் இருந்து கமலின் தீவிர ரசிகர் ஆவார்.

அந்த வகையில் லோகேஷ், கமல் கூட்டணியில் உருவாகி இருந்தது விக்ரம் படம். எதிர்பார்ப்பையும் மீறி ரசிகர்களை திக்கு முக்காட செய்திருந்தது. அடுத்ததாக இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது குட் பேட் அக்லி.

அஜித்தின் ஃபேன் பாயாக இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருந்தார். அஜித் நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் ரெஃபரன்ஸை வைத்து மக்களுக்கு ஒரு ட்ரீட்டாக குட் பேட் அக்லி படத்தை கொடுத்துள்ளார்.