சினிமா செய்திகள்

Ajith: திரிஷா, அர்ஜுனுக்காக வெயிட் பண்ண முடியாது.. ஆதிக்கிற்கு அஜித் போட்ட உத்தரவு

By Vijay · 08 மே 2024 · Updated 08 மே 2024
ajith-adhik-arjun-Trisha

Ajith: அஜித்தின் விடாமுயற்சி எப்போதுதான் வெளிவரும் என ரசிகர்கள் தவம் இருந்து வருகின்றனர். எப்போதோ ஆரம்பித்த படப்பிடிப்பு இடையிடையே பிரேக் விட்டு அனைவரையும் சோதித்து வருகிறது.

இதற்கு அஜர்பைஜான் கிளைமேட்டும் ஒரு காரணம். அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் 20ஆம் தேதி படப்பிடிப்பை ஆரம்பிக்க பட குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் அந்நாட்டின் காலநிலை காரணமாக தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அதனால் திரிஷா இப்போது தக் லைஃப் படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.

அதே போல் தான் அர்ஜுனும் தன் மகளின் திருமண வேலைகளை கவனிக்க சென்று விட்டார். அடுத்த மாதம் ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

அஜித் போட்ட உத்தரவு

அதனால் ரிசப்ஷன் மற்றும் இதர வேலைகளை அர்ஜுன் கவனித்து வருகிறார். இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் பிசியாக இருக்கிறார்கள்.

இதை பார்த்த அஜித் அவங்களுக்காக எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது என குட் பேட் அக்லி பக்கம் கவனத்தை திருப்பி விட்டார். அதன்படி அவர் ஆதிக்கிற்கு ஒரு உத்தரவை போட்டுள்ளார்.

அதாவது விடாமுயற்சி தொடங்கும் வரை இப்பட வேலைகளை ஆரம்பிக்கலாம் என சொல்லிவிட்டாராம். அதை அடுத்து நாளை பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் ஆரம்பமாக உள்ளது.

ஏனென்றால் படம் பொங்கல் வெளியீடு என அறிவித்தாகிவிட்டது. அதனாலயே தாமதிக்க வேண்டாம் என அஜித் இப்படி ஒரு கணக்கு போட்டு இருக்கிறார்.