சினிமா செய்திகள்

வாயில் தீப்பொறியுடன் அஜித் படத்தை வரைந்து மெய் சிலிர்க்க வைத்த ரசிகர்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

By Arun · 19 மார்ச் 2024 · Updated 12 மே 2025
ajith sad face

Ajithkumar: ஒரு புத்தகத்தை அதை சுற்றி போட்டிருக்கும் அட்டையை வைத்து கணித்து விடாதீர்கள்’ என்று சொல்வாங்க. இந்த வார்த்தை நூத்துக்கு நூறு நடிகர் அஜித்குமாருக்கு பொருந்தும்.

அவர் தன்னை பத்தி வெளியில எதுமே தெரிய கூடாதுனு நினைக்குறவரு. அதனால தான் நிறைய பேர் இஷ்டத்துக்கு அவரை பத்தி நெகட்டிவா நிறைய விஷயங்களை சொல்றாங்க.

எப்போதுமே அஜித்தை பத்தி தப்பான செய்தி தான் அதிகமா வெளில வரும். ஆனா பெரிய பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுற சர்வே ல மக்களுக்கு அதிகம் பிடித்தவர்கள் லிஸ்டில் அஜித் தான் இருப்பாரு. சுயநலவாதின்னு சொல்றாங்க, ரசிகர்களை பத்தி யோசிக்க மாட்டாருனு சொல்றாங்க.

அப்புறம் எப்பிடி ஆதரவு இவ்ளோ இவ்ளோ இருக்குனு சந்தேகம் நமக்கே வரும். அஜித் மேல நெகடிவ் விஷயத்தை பரப்புறவங்க அதிகமா அவரை பிடிக்காதவங்களா தான் இருப்பாங்க. அவர் இரங்கி வந்து தன்னிலை விளக்கம் கொடுக்க விரும்ப மாட்டார் என்ற தைரியம்தான் இது போன்றவர்களுக்கு.

ஆடம்பரமான அப்டேட் கொடுக்க மாட்டார், ஆளை கூப்பிட்டு ஆடியோ வெளியீட்டு விழா நடத்த மாட்டார். இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் அவரை கொண்டாட தவறியதில்லை. சில நேரங்களில் அவர் தவறே செய்து இருக்க கூடிய நிலை வந்தாலும், எங்கேயும் அவருடைய ரசிகர்கள் அவரை விட்டு கொடுக்க மாட்டார்கள்.

சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட தமிழ் சினிமா ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டார்கள். இப்படி பட்ட ஒரு சூழ்நிலையில் ஓவியர் ஒருவர் வரைந்த அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரெண்டாகும் புகைப்படம்

ஓவியர் செல்வம் என்பவர் வாயில் பிரஷை வைத்து கொண்டு இந்த ஓவியத்தை வரைந்து இருக்கிறார். இதில் பிரம்மிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் அந்த பிரஷ்ஷில் தீப்பொறி பறக்கிறது. அதை வைத்து தான் அவர் அந்த ஓவியத்தை வரைந்து இருக்கிறார்.

என்னதான் அவர் மீது போலி சாயம் பூசப்பட்டாலும் அவருடைய ரசிகர்கள் அவர் மீது வைத்து இருக்கும் அன்பு எப்போதும் குறையாது. இதை தான் கெட்டாலும் மேன்மக்கள் , மேன்மக்கள் தான் என்று சொல்வார்கள் போல .