சினிமா செய்திகள்

நேற்று ஆபரேஷன், இன்று புட்பால் மேட்ச்.. வைரலாகும் அஜித்தின் புகைப்படம்

By Arun · 09 மார்ச் 2024 · Updated 12 மே 2025
ajith-cinemapettai

Actor Ajith : கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்தனர். ஏனென்றால் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அஜித் சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அது ஆப்ரேஷன் செய்து அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த செய்தி வதந்தி என்று கூறியிருந்தார். மேலும் அஜித்தின் காதிற்கு கீழ் சின்ன கட்டி இருந்ததாகவும் அது அகற்றப்பட்டதாக கூறியிருந்தார். நேற்றைய தினம் அஜித் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டார்.

ஆனாலும் அஜித்தின் ரசிகர்கள் பதட்டத்தில் இருந்த நிலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்படி தனது மகனின் புட்பால் மேட்சை பார்க்க தனது மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார் அஜித். அதாவது அஜித்தின் மகன் ஆத்விக் ஃபுட் பாலில் மிகந்த ஆர்வம் உடையவர்.

அப்பாவுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல அஜித் பைக் ரேஸில் புலி என்றால் ஆத்விக்கு ஃபுட்பாலில் அவ்வளவு பிரியம். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் அஜித் ஓய்வு எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் தனது மகன் விளையாட்டை பார்ப்பதற்காக ஸ்டேடியத்திற்கு வந்திருக்கிறார்.

வைரலாகும் அஜித்தின் புகைப்படம்

அங்கு தன்னுடன் இருந்தவர்கள் மற்றும் ரசிகர்களுடன் அஜித் சிரித்து பேசும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் அஜித் நலமுடன் இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட ரசிகர்கள் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.