சினிமா செய்திகள்

இந்த 4 பிரபலங்களை விரோதி மாதிரி பார்க்கும் அஜித்.. பெயர் வாங்கிக் கொடுத்த முருகதாஸை ஓரங்கட்டிய காரணம்

By Vijay · 17 ஏப் 2024 · Updated 17 ஏப் 2024
ajith ar murugadoss

Ajith: அஜித்துக்கு திறமை இருக்கிற அளவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும் கைகூடி இருக்கிறது என்றே சொல்லலாம். காரணம் தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்று மட்டுமே நினைத்து சினிமாவில் இவ்வளவு நாள் தாக்கு பிடித்து இருக்கும் ஒரே நடிகர் இவராகத்தான் இருக்க முடியும்.

அதே மாதிரி மனசுல என்ன தோணுதோ அதை யோசிக்காமல் பட்டென்று செய்யக்கூடிய ஒரு தைரியமும் இவரிடம் இருக்கிறது. உதாரணத்திற்கு அஜித் எத்தனையோ படங்களில் நடித்து வந்தாலும் அதில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்திருப்பார்.

அப்படி இருக்கும் பொழுது அஜித்துக்கு சில பிரபலங்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இன்னும் வரை அவர்களை விரோதி மாதிரியே பார்த்து வருகிறார். இன்னும் சொல்ல போனால் அவர்களுடன் இணைந்தால் அஜித்துக்கு வெற்றி என்பது நிச்சயம் உண்டு. ஆனாலும் அவர்கள் இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுக்க விரும்பாதவர்.

நான்கு பிரபலங்களை வெறுத்து ஒதுக்கும் அஜித்

அப்படி அஜித் யாரை வெறுத்து ஒதுக்கி வருகிறார் என்றால் ஏ ஆர் முருகதாஸ், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் போனி கபூர். இதில் ஏஆர் முருகதாசுடன் கூட்டணி வைத்து தீனா படத்தில் நடித்து மாஸ் ஹிட் ஆனது. அத்துடன் தல என்ற பெயரும் வாங்கிக் கொடுத்தது.

அப்படிப்பட்ட முருகதாஸை வெறுப்பதற்கான காரணம் என்னவென்றால், அந்தப் பாடத்தில் அஜித்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை தெரிந்ததும் முருகதாஸ், அஜித்துக்கு அதிகமான சம்பளம் கொடுப்பது வேஸ்ட் என்று சொல்லி இருக்கிறார். இதனால் இப்படத்துடனே முருகதாஸுக்கு எண்டு கார்டு போட்டு விட்டார்.

அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து மங்காத்தா படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்தார். அதன் பின்பு அஜித்தும் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படங்களை அஜித் பெர்மிஷன் இல்லாமல் லீக் பண்ணி விட்டதால் இவருக்கும் நமக்கும் செட்டாகாது என்று அஜித் ஒதுங்கி விட்டார்.

இதனை அடுத்து மியூசிக் டைரக்டர் பாரத்வாஜ். அஜித்தும் இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அடுத்து கொஞ்ச நாளிலே இவர்களுக்குள் ஏற்பட்ட பண பிரச்சனையால் ஒரேடியாக பிரிந்து விட்டார்கள். அதே மாதிரி தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்துக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் குளறுபடி பண்ணியதால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துவிட்டது.

இதனாலேயே இந்த நான்கு பிரபலங்களுடன் இணையும் வாய்ப்பை நிறுத்திவிட்டார்.