சினிமா செய்திகள்

உயிரை பணயம் வைத்து அஜித் செய்த ஸ்டாண்ட்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

By Arun · 04 ஏப் 2024 · Updated 04 ஏப் 2024
ajith-vidamuyarchi

Ajith : உயிரைப் பனையம் வைத்து அஜித் ஸ்டாண்ட் காட்சியில் நடித்த வீடியோவை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதாவது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது. இதனால் இறுதிகட்ட படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் விடாமுயற்சி படம் எப்போது தொடங்கும் என எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள வீடியோ

suresh-chandra-ajith
suresh-chandra-ajith

இந்த சூழலில் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. எப்போதுமே அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஈடுபாடு உள்ளது.

விடாமுயற்சியில் உயிரைப் பனையம் வைத்த அஜித்

அவ்வாறு விடாமுயற்சி படப்பிடிப்பில் பிக் பாஸ் ஆரவ்வுடன் அஜித் இருவரும் ஒன்றாக பயணிக்கின்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் கவிழ்ந்து விழுகிறது. இவ்வாறு உயிரை பணயம் வைத்து விடாமுயற்சியில் அஜித் நடித்துள்ளார்.

விடாமுயற்சி மேக்கிங்

vidamuyarchi-making

மேலும் இந்த காட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படமாக்கப்பட்டுள்ளது. அஜித்தின் இந்த டெடிகேஷன் தான் அவரை சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும் அஜித் சமீபத்தில் அப்பல்லோவில் ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறிது ஓய்வும் அவருக்கு தேவைப்படுகிறது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவருடைய குட் பேட் அக்லி படப்பிடிப்பும் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர்.