சினிமா செய்திகள்

பச்ச தண்ணி பல்லுல படாம காத்திருந்த மீடியாக்கள்.. ஓட்டு போட வந்த விஜய்யை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை

By Vijay · 19 ஏப் 2024 · Updated 12 மே 2025
vijay-blue sattai

Actor Vijay: நாடாளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டனர்.

blue sattai maaran
blue sattai maaran

அதில் அஜித் காலை 6.45 மணிக்கு வந்து ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் கவர்ந்தார். அதை அடுத்து ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அனைவரும் வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

இப்படி இன்றைய தினம் பரபரப்பாக இருந்தாலும் விஜய்யின் வருகையை தான் ஒட்டு மொத்த மீடியாக்களும் எதிர்பார்த்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் வீட்டு வாசலிலேயே மீடியாக்கள் அனைவரும் பச்ச தண்ணி கூட பல்லுல படாமல் காத்திருந்தனர்.

விஜய்யை கிண்டலடித்த ப்ளூ சட்டை

ஏனென்றால் கடந்த தேர்தலில் அவர் சர்ப்ரைஸ் ஆக சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். இதை நிச்சயம் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனாலயே இந்த முறை அவர் எப்படி ஆச்சரியப்படுத்துவார் என ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஆனால் நேரம் செல்ல செல்ல அவர் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் கூட எழுந்தது. இதை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பங்கமாக கலாய்த்து ட்வீட் போட்டிருந்தார்.

அதாவது விஜய்யின் சைக்கிள் டிரைவர் வேலைக்கு வர தாமதம் என தகவல். எப்போது ஓட்டு போட வருவார் தளபதி என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

இப்படிப்பட்ட அமலி துமளிக்கு நடுவில் விஜய் அமைதியாக வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவையே தெறிக்க விட்டுள்ளது.