சினிமா செய்திகள்

கமலை திட்டிக்கொண்டே இருந்த டேனியல் பாலாஜி.. ஆண்டவரை பிடிக்காமல் போன காரணம்

By Vijay · 01 ஏப் 2024
kamal-daniel balaji

Actor Daniel Balaji: கடந்த சில தினங்களுக்கு முன்பு டேனியல் பாலாஜி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். 48 வயதில் அவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும் கலங்கடித்துள்ளது.

அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவர் குறித்த பல விஷயங்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவருடைய மிரட்டும் நடிப்பை பிரபலங்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இவருக்கு காக்க காக்க, பொல்லாதவன் போன்ற பல படங்கள் திருப்புமுனைகளாக இருந்திருக்கிறது. ஆனால் ஆண்டவரையே மிரட்டிய அமுதன் கேரக்டர் தான் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜி முக்கிய வில்லனாக நடித்திருந்தார். சைக்கோ டாக்டராக தொடர் கொலைகளை செய்யும் இவருடைய கேரக்டர் படு மிரட்டலாக இருக்கும்.

கமலை திட்டிய டேனியல் பாலாஜி

அதில் ராகவன் என திமிருடன் கமலை பார்த்து கூறும் இவருடைய தில்லும் வேற ரகம். மேலும் அப்படம் முழுக்க இவர் கமலை திட்டி தீர்த்துக் கொண்டு தான் இருப்பார்.

வரம்புக்கு மீறி அவர் பேசும் படியாக தான் காட்சிகள் இருக்கும். ஆனால் அப்படி கமலை ஓவராக பேசும் வசனங்கள் எதுவும் அவருக்கு பிடிக்கவில்லையாம்.

அந்த கேரக்டருக்காக வேறு வழியில்லாமல் நடித்திருக்கிறார். அதிலும் கமலை பிடிக்காமல் வசனம் பேசி நடித்து விட்டேனே என அவர் தன் நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு கூறுவாராம்.

ஆனால் அந்த கேரக்டர் தான் இன்று வரை அவரை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் அவருக்கு ஆறு மாதம் வரை இருந்ததாம். அதுவரை கமலை பிடிக்காத அமுதனாக தான் இவர் இருந்திருக்கிறார்.