விஜய் லிப்லாக் கொடுத்த 6 ஹீரோயின்கள்.. நச்சுன்னு ஜோவுக்கு கொடுத்த இச்

Vijay Liplock 6 Heroines: விஜய் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டி கொண்டிருந்தாலும் ஒரு காலகட்டத்தில் காதல் நாயகனாக தான் வலம் வந்தார். அதற்கு ஏற்ப காதல் காட்சிகளில் மனுஷன் பின்னி பெடல் எடுத்து விடுவார். அந்த வகையில் விஜய் லிப் லாக் கொடுத்த ஹீரோயின்கள் யார் யார் என்று காண்போம்.

சங்கவி: விஜய் நடிக்க வந்த புதிதில் சங்கவியுடன் அதிக படங்களை நடித்த. அதனாலேயே இவர்களுக்குள் காதல் என்ற கிசுகிசுவும் பரவியது. அந்த வகையில் இவர்கள் இருவரும் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படங்களில் எல்லாம் ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதேபோல் லிப் லாக் காட்சிக்கும் பஞ்சம் இருக்காது.

ஜோதிகா: நடிக்க வந்த புதிதிலேயே லிப் லாக் காட்சியில் நடித்து அசத்திய பெருமை ஜோவுக்கு உண்டு. அதன்படி எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், ஜோதிகா இருவரும் லிப் லாக் செய்திருப்பார்கள். படம் முழுக்க எலியும் பூனையுமாக அடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் கடைசியில் செய்யும் இந்த ரொமான்ஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

திரிஷா: விஜய்க்கு ஏற்ற சரியான ஜோடி என பேசப்படும் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே பல படங்களில் ஜோடி வழக்கம் போல இவர்களின் கெமிஸ்ட்ரி இப்படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. அதிலும் ஒரு எமோஷனல் காட்சியில் இருவரும் செய்த லிப்லாக் ரசிகர்கள் எதிர்பாராத ஒன்று.

அனுஷ்கா: தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்த நடிகையான இவர் விஜய் உடன் வேட்டைக்காரன் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். அதில் இவர்களுக்கு இடையேயான காட்சிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதே போல் ஒரு சின்ன தாமரை என்ற பாடலில் இவர்கள் இருவருக்கும் பட்டும் படாமல் ஒரு லிப் லாக் காட்சி இடம் பெற்று இருக்கும்.

இலியானா: தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருக்கிறார். அதில் கிளைமாக்ஸ் காட்சியில் மணப்பெண் கோலத்தில் விஜய்யை சந்திக்க வரும் இவர் திடீரென ஒரு லிப் லாக் செய்வார். அந்தக் காட்சி கவர்ச்சியாக இல்லாமல் எதார்த்தமாக அமைந்திருக்கும்.

சமந்தா: விஜய் உடன் கத்தி, தெறி மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவரும் அவருக்கு ஏற்ற ஜோடி தான். அந்த வகையில் தெறி படத்தில் விஜய் சமந்தாவுக்கு லிப் லாக் கொடுத்திருப்பார். அதேபோல் அப்படத்தில் அவர்களின் பிளாஷ்பேக் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி விஜய் கமலையே மிஞ்சும் அளவுக்கு காதல் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். இதில் ஸ்ரேயா, நயன்தாரா போன்ற நடிகைகளுக்கும் இலை மறை காயாக லிப் கிஸ் கொடுத்திருப்பார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →