சினிமா செய்திகள்

அஜித் இல்லாமல் வெளிவந்த ஃபேமிலி போட்டோ.. ரத்த சொந்தங்களை மட்டும் வெளியிட்ட ஷாலினி

By Arun · 15 ஏப் 2024 · Updated 15 ஏப் 2024
shalini-ajith

Ajith : ஒரு காலத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகாதா என்று காத்துக் கிடந்த நிலைமை போய் தினமும் ஒரு போட்டோ என அஜித்தின் போட்டோ வெளியாகிக் கொண்டிருக்கிறது. தற்போது ஷாலினியின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் எங்கப்பா அஜித்தை காணும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது அஜித்தின் குடும்பம் சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார். அதில் அஜித்தின் லேட்டஸ்ட் மற்றும் பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஷாலினி

shalini-family-photo
shalini-family-photo

இன்று தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி ஒரு புகைப்படத்தை போட்டு இருக்கிறார். அதாவது பல வருடங்களுக்கு முன்பு அவருடைய அம்மா உடன் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் அவரது தங்கை ஷாமிலி மற்றும் ஷாலினி ஆகியோர் எடுத்துக்கொண்டு புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தனது அம்மாவின் பிறந்தநாளை உடன்பிறப்பு மற்றும் குழந்தைகளுடன் ஷாலினி கொண்டாடி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தையும, பழைய புகைப்படத்துடன் இணைத்து ஷாலினி பதிவிட்டிருக்கிறார்.

ரத்த சொந்தங்கள் மட்டும் இடம் பெற்றுள்ள இந்த புகைப்படத்தில் அஜித் இடம்பெறவில்லை. அஜித் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இதில் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடும். மேலும் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.