Vijay : தளபதியுடன் களமிறங்கும் சீமராஜா.. வெங்கட் பிரபுவால் உறுதி செய்யப்பட்ட தகவல்

விஜய்யின் கோட் படத்தில் பிரபலம் ஒருவர் நடிப்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வெங்கட் பிரபு படம் என்றாலே எக்கச்சக்க பட்டாளம் நிறைந்திருக்கும். அதிலும் குறிப்பாக கோட் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மைக் மோகன், அஜ்மல், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என பலர் சங்கமித்து உள்ளனர். விஜய் பிறந்தநாள் அன்று கோட் படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய கோட் படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார். அதாவது வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருக்கிறார். அதற்கான கண்டிப்பாக கூட இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

கோட் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

ஆனால் கோட் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இருந்ததால் கண்டிப்பாக ஒரு சின்ன கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதாவது வெங்கட் பிரபுவை சிவகார்த்திகேயன் சந்திக்க வேண்டும் என்றால் அவரது வீடு அல்லது வேறு இடத்தில் சந்தித்து இருக்கலாம்.

ஆனால் கோட் படப்பிடிப்பில் சந்தித்துள்ளார் என்றால் கண்டிப்பாக நடித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பெரிதும் ஆசைப்பட்ட நிலையில் சில காரணங்களினால் அது முடியாமல் போனது.

இப்போது விஜய்யுடன் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். மேலும் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் உருவாகி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →